azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

When a ray of light falls on several pieces of glass, the light is scattered in many different directions. Some people may think that this light came from several sources. That is incorrect. The single source of light fell on a large number of coloured glasses, and hence appeared as if it is composed of different colours. If the same light falls on the ground, we would not be able to see the light, because the ground obstructs and absorbs the light. In the same manner, if the brilliant shining grace from the Lord falls on a sattwic (pure) person, he/she will shine brilliantly. If the same grace from the Lord, falls on a person with rajasic (aggressive) qualities, it will make him/her develop several desires of the world. If the same grace falls on a person with tamasic (dull) qualities, it will not only go through without having any effect, but also might lose some of its lustre. [Divine Discourse, Summer Roses on Blue Mountains, 1976, Ch. 8]
எப்போது, ஒளியின் ஒரு கதிர் பல கண்ணாடித் துண்டுகளில் விழுகிறதோ, அந்த ஒளி பல திசைகளில் சிதறிப் பரவுகிறது.சிலர், இந்த ஒளி வெவ்வேறு இடங்களிலிருந்து வந்ததாக நினைக்கலாம். அது தவறானதாகும். ஒரே ஒரு இடத்திலிருந்து வந்த ஒளி எண்ணற்ற வண்ணக் கண்ணாடிகளில் விழுவதால், பல வண்ணங்களால் ஆனது போலத் தோற்றமளிக்கிறது.அதே ஒளி, தரையில் விழுமானால், அந்தத் தரை, அதைத் தடுத்து, ஒளியை உட்கிரஹித்துக் கொள்வதால், அந்த ஒளியை நாம் காண முடியாது.அதைப் போலவே, இறைவனது அதிப்பிரகாசமான அருள் எனும் கதிர், சாத்வீக மனிதர் மீது விழுமானால், அவனோ அல்லது அவளோ ப்ரகாசமாக ஜ்வலிப்பார். இறைவனிடமிருந்து அதே அருள், ஒரு ரஜோ குணமுள்ளவர் மீது விழுந்தால், அது அவரை,உலகியலான பல ஆசைகளை வளர்த்துக் கொள்ளச் செய்யும். அதே அருட்கதிர் ஒரு தமோ குணமுள்ளவர் மீது விழுந்தால், எந்த ஒரு பலனுமின்றிப் போவதோடு மட்டும் அல்லாது, தனது காந்தியை ஓரளவு இழக்கக் கூடச் செய்யும்.