azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
A young mother puts her baby to sleep and when the little one is asleep, she attends to other household works. But all the while her attention is on the baby, and her thoughts are always about when the baby would wake up. Even if she is engaged in an urgent and pressing work, her attention is on the baby, and as soon as she hears the cry, she comes running. She does not wait to analyse in what tune (raga) and tempo (tala) the baby is crying. Just as the mother comes running as soon as she hears the baby’s cry, so also, when a person cries to the Lord from the depths of their heart, the Lord responds instantly and helps every devotee. God does not ask what path this devotee is adopting or what bhajans are being sung to call Him, etc. But He looks for the sincerity with which the devotee has cried out. (Divine Discourse, Summer Roses on Blue Mountains, 1976, Ch 7)
ஒரு இளம் தாய் தன் குழந்தையைத் தூங்க வைத்து விட்டு, அது தூங்கும் போது, மற்ற வீட்டு வேலைகளைக் கவனிக்கிறாள்.ஆனால் அவளது கவனம் முழுவதும் அந்தக் குழந்தையின் மீதே இருக்கும் ; அவளது சிந்தனைகள் எல்லாம், அந்தக் குழந்தை எப்போது விழித்துக் கொள்ளும் என்பதிலேயே இருக்கும்.அவள் முக்கியமான மற்றும் அவசரமான வேலையில் ஈடுபட்டு இருந்தாலும், அவளது கவனம் குழந்தையின் மீதே இருக்கும்;அதன் அழுகைக் குரல் கேட்டவுடனேயே அவள் ஓடி வருவாள். அந்தக் குழந்தை எந்த ராக, தாளத்தில் அழுகிறது என்ற ஆராய்ச்சிக்காக அவள் காத்திருப்பதில்லை.எவ்வாறு ஒரு தாய், தனது குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்டவுடனேயே ஓடி வருகிறாளோ, அதைப் போலவே, எப்போது ஒரு மனிதன் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து இறைவனிடம் கூக்குரலிடுகிறானோ,உடனேயே இறைவனும் விரைந்து வந்து ஒவ்வொரு பக்தனையும் காக்கிறான். இந்த பக்தன் எந்தப் பாதையை அனுசரிக்கிறான் அல்லது அவனை அழைக்க எந்த பஜனைகள் பாடப் படுகின்றன என்றெல்லாம் , இறைவன் கேட்பதில்லை.ஆனால்,பக்தன் எவ்வளவு மனப்பூர்வமாக அறைகூவல் விடுக்கிறான் என்பதையே இறைவன் பார்க்கிறான்.