azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Form a satsang (holy company), where you meet and exchange truths and virtuous talk, where you study holy books and discourses on the glory of God. Why waste precious time in scandals about others and criticisms of others' behaviour? Cultivating envy, malice, hatred and anger against others is an evil pastime that recoils on oneself. In everyone there is resident the self-same divine spark; so caviling at another is tantamount to caviling at Divinity. The game of life is worth playing and becomes interesting only when there are bounds and rules which limit and control. Imagine a game of football without any rules or bounds for the field. It will be chaos; it will be a free fight; it will be a riot. No one can say who wins and how. Righteousness (Dharma) and Divinity (Brahma) are the boundaries of the field. The virtues fight against the vicious tendencies. Play the game, paying heed to the warnings of ‘foul’ and ‘out’! (Divine Discourse, Anantapur High School for Girls, School Day, 1966)
நீங்கள் சந்தித்துக் கொள்ளவும், சத்தியம் மற்றும் நல்லொழுக்கப் பேச்சுக்களைப் பரிமாறிக் கொள்ளவும், புனித நூல்கள் மற்றும் இறைவனது மாட்சிமையைப் பற்றிய உபன்யாசங்களைப் படிப்பதற்கும், ஏற்ற ஸத்ஸங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். விலை மதிப்பற்ற நேரத்தை பிறரைப் பற்றிய அவதூறுகள் மற்றும் பிறரது நடத்தையைப் பற்றிய விமர்சனங்களில் ஏன் வீணடிக்க வேண்டும்? பிறர் மீது, பொறாமை, வன்மம், த்வேஷம் மற்றும் கோபத்தை வளர்த்துக் கொள்வது, ஒருவர் மீதே திருப்பிப் பாயக்கூடிய தீய பொழுது போக்காகும். ஒவ்வொருவர் உள்ளும் அதே தெய்வீகத்தின் ஒளிக்கீற்று தான் உறைகிறது; எனவே,பிறரைக் கேலி செய்வது இறைவனையே கேலி செய்வதற்கு ஒப்பாகும். வாழ்க்கை எனும் விளையாட்டு, வரைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே, விளையாடத் தகுதி படைத்ததாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். விதிமுறைகளோ அல்லது மைதான எல்லைகளோ இல்லாத ஒரு கால்பந்து ஆட்டத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அது குழப்பமானதாகவும், அடிதடியாகவும், கலவரமாகவுமே இருக்கும். யார் ஜெயித்தார்கள், யார் தோற்றார்கள் என்று எவரும் கூற முடியாது. தர்மமும், ப்ரம்மமுமே, இந்த மைதானத்தின் எல்லைகள். நல்லொழுக்கங்கள், தீயகுணங்களை எதிர்த்து இதில் போராடுகின்றன. ‘’ ஃபௌல் ‘’, ‘’ அவுட்’’ என்ற எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு, இந்த விளையாட்டை விளையாடுங்கள்.