azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
There are certain essential remedial action, without doing which to expect an Avatar to simply remove all suffering is very foolish. Firstly, you should make an attempt to make good use of the mental and physical strengths that have been gifted to you. If you are so lazy as not to use the mental and physical strengths you have, what will you do with divine strengths? Just because God gave you enough food, for you to expect that God must help you in transferring this food to your stomach is indeed a lazy idea. You should make good use of God’s gifts of your hands, a palate, and a mouth. If you choose not to use your body, mind and mental strength in a good way, then, no one can help you! (Summer Roses on Blue Mountains, 1976, Ch 6)
சில குறிப்பிட்ட,அத்தியாவசியமான, சீர்படுத்தும் செயல்கள் உள்ளன; அவற்றைச் செய்யாமல், ஒரு அவதாரம் அனைத்துத் துன்பங்களையும் நீக்கி விட வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனமே. முதன் முதலில், நீங்கள் உங்களுக்குப் பரிசாக்க் கொடுக்கப் பட்டுள்ள மன மற்றும் உடல் வலிமைகளை நன்கு பயன்படுத்த முயல வேண்டும். உங்களிடம் உள்ள மன மற்றும் உடல் வலிமைகளைப் பயன் படுத்துவதற்கே சோம்பல் கொண்டவர்களாக நீங்கள் இருந்தால், தெய்வ வலிமைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இறைவன் உங்களுக்கு உணவை அளித்திருக்கிறான் என்பதால், அவன் அந்த உணவை உங்களது வயிற்றிற்கும் கொண்டு செல்ல உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது, உண்மையிலேயே ஒரு சோம்பேறித் தனமான எண்ணமே. இறைவனது பரிசுகளான, உங்களது கரங்கள், ஒரு தட்டு மற்றும் ஒரு வாயை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உங்கள் உடல், மனம் மற்றும் மனவலிமையை பயன்படுத்த வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால், யாராலும் உங்களுக்கு உதவி செய்ய முடியாது !