azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
People today tend to be naive in their actions. They go after nondescript preceptors and seek messages from them. When the preceptors are themselves wallowing in bondage, how are they going to free you? How can someone filled with delusions themselves rid you of your delusions? Some people are constantly seeking some spiritual messages (mantra). What is the mantra you need? It is the understanding of your true nature. This mantra is in you. Everyone within has the mantra, tantra and yantra (the spiritual message, the method of practicing it and the instrument for implementing it). Your process of breathing verily contains the mantra you need: So-Ham (I am That). What is the yantra (the instrument)? Your physical body! What is the tantra? Your heart! When you have all the three, why go to anyone for a message? It is a sign of weakness and ignorance. Do not go in search of Gurus. (Divine Discourse, July 7, 1990.)
இந்நாளில் மனிதர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடக்க முற்படுகிறார்கள். அவர்கள் பல போலி குருமார்களைப் பின்பற்றி, அவர்களிடமிருந்து உபதேசம் பெற விழைகிறார்கள். இந்த குருமார்களே பந்தத்தில் உழலும்போது, அவர்கள் உங்களை எவ்வாறு விடுவிக்கப் போகிறார்கள்? மாயையினால் நிரம்பி வழியும் ஒருவர் உங்களது மாயையை எவ்வாறு களைய முடியும்? சிலர் எப்போதும் ஏதாவது ஒரு மந்திரத்தை நாடுகிறார்கள். உங்களுக்குத் தேவையான மந்திரம் எது? அது, உங்களது உண்மை நிலையைப் புரிந்து கொள்வதே. இந்த மந்திரம் உங்களுள்ளேயே இருக்கிறது. ஒவ்வொருவர் உள்ளும், மந்திரம், தந்திரம், மற்றும் யந்திரம் ( ஆன்மீக வாசகம், அதைப் பயிலுவதற்கான முறை, அதற்குத் தேவையான கருவி). உங்களது சுவாச முறையே, உங்களுக்குத் தேவையான இந்த மந்திரத்தைக் கொண்டதே; ஸோ-ஹம் ( நான் அதுவே ) இதற்கான யந்திரம் எது ? உங்களது உடலே; இதற்கான தந்திரம் எது ? உங்களது இதயமே ! உங்களிடமே இவை மூன்றும் இருக்கும் போது, மந்திரத்தை நாடி, எவரிடமும் எதற்காகப் போக வேண்டும்? இது பலஹீனம் மற்றும் அறியாமையின் ஒரு சின்னமே. குருமார்களைத் தேடி அலையாதீர்கள்.