azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Upa-vasa (Upa-near; vasa-living) means ‘living in the proximity of God’. Periodical fasting is prescribed to help your digestive system overhaul itself and get much needed rest. Vows, vigils, fasts, and all kinds of voluntarily imposed or involuntarily suffered hardships are to be looked upon as promoting spiritual strength, not weakening your physical stamina. Gardeners dig around the roots, and clip the wayward twigs only to make the plant grow fast into a trim and tall tree. Some people, however, fast on Monday for Shiva, Thursday for Me!, Friday for Lakshmi, on Saturday to propitiate Shani and so on! These misdirected aspirants spoil their health and well-being by overdoing the vow of fasting. When thoughts of food bother you, and pangs of hunger disturb you, then, it is much better to eat than fast. Remember the purpose of fast is to spend time in the contemplation of God and not to punish the body by giving up a meal or a series of meals. (Sathya Sai Speaks, Vol 6, Ch 2, Mar 1966)
உபவாஸம் ( உப-அருகில்,வாஸ-வசித்தல் ) என்றால், ‘’ இறைவனுக்கு அருகாமையில் இருத்தல் ‘’ என்று பொருள். அவ்வப்போது, பட்டினி இருப்பது உங்களது ஜீரணமண்டலம் தன்னையே பழுது பார்த்துக் கொள்வதற்கும், மிகவும் தேவையான ஓய்வு பெறுவதற்கும் உதவுவதற்காக அறிவுறுத்தப் பட்டுள்ளது. விரதங்கள்,கண்விழிப்பு, உபவாஸங்கள், மேலும் வேண்டுமென்றோ அல்லது தன்னிச்சையாகவோ, நாம் வருத்திக் கொள்ளும் அனைத்து விதமான கஷ்டங்களையும், ஆன்மீக வலிமையை மேம்படுத்துவையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, உங்களது உடல் திறனை பலஹீனப் படுத்துபவையாக அல்ல. தோட்டக்காரர்கள், வேர்களின் அருகாமையில் தோண்டி,தாறுமாறாக வளரும் கிளைகளைக் களைவது, ஒரு செடி வேகமாக ஒரு நேர்த்தியான மற்றும் உயரமான மரமாக வளருவதற்காக மட்டுமே.ஆனால், சிலர் திங்கட்கிழமை சிவனுக்காகவும், வியாழக்கிழமை எனக்காகவும், வெள்ளிக் கிழமை லக்ஷ்மிக்காகவும், சனிக்கிழமை,சனிபகவானை வழிபடுவதற்காகவும் என்று பட்டினி கிடப்பார்கள்! இப்படித் தவறாகப் புரிந்து கொள்ளும் சாதகர்கள், தங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனை, அபரிமிதமான பட்டினி விரதங்களால் கெடுத்துக் கொள்கிறார்கள். எப்போது உணவைப் பற்றிய சிந்தனைகள் உங்களைத் தொந்தரவு செய்து, பசியின் வேதனை உங்களை வருத்துகிறதோ, அப்போது, பட்டினி கிடப்பதை விட, சாப்பிடுவது எவ்வளவோ மேலானது. உபவாஸம் இருப்பதன் நோக்கம், நேரத்தை இறைதியானத்தில் செலவிடுவதற்காகவே அன்றி, ஒன்று அல்லது தொடர்ந்து பல சாப்பாடுகளை விட்டு விட்டு உடலை வருத்திக் கொள்வதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.