azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

We generally think that the Gita consists of certain teachings which will help us and teach us renunciation, and take us along the spiritual path. This is not the correct way of understanding. We should recognise that the Gita gives us teachings which will help us to run our daily lives and meet the situations which we come across. Krishna established the truth that our spiritual life and our daily worldly life are not two distinct compartments. He demonstrated that our daily life is something intimately connected with spiritual life. He showed the need for harmony and connection between one's thoughts, words and deeds. He proclaimed that in order that one may have good thoughts, the mind is very important. In order that one may communicate these thoughts to the world, word is very important. In order to put this into action, one’s deeds are equally important. (Divine Discourse, Summer Roses on Blue Mountains, 1976, Ch 6)
நாம், பொதுவாக, ஸ்ரீமத் பகவத் கீதை, நமக்கு உதவி,துறவு மனப்பாங்கினை கற்பித்து, ஆன்மீகப் பாதையில் நம்மை இட்டுச் செல்வதற்கான சில போதனைகளைக் கொண்டது என நினைக்கிறோம். இது, ஸ்ரீமத் பகவத் கீதையைப் புரிந்து கொள்வதற்கான சரியான வழியல்ல. ஸ்ரீமத் பகவத் கீதை , நமது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கும், அதில் நமக்கு வரும் சந்தர்ப்பங்களை எதிர் கொள்வதற்கும்,உதவுகின்ற போதனைகளைத் தருகிறது என்பதை நாம் உணர வேண்டும்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,நமது ஆன்மீக வாழ்க்கையும், உலகியலான அன்றாட வாழ்க்கையும் தனித் தனியானவை அல்ல என்ற உண்மையை நிலை நாட்டினார். நமது அன்றாட வாழ்க்கை, நமது ஆன்மீக வாழ்க்கையுடன் நெருங்கிய உறவு கொண்டது என்பதை அவர் எடுத்துக் காட்டினார். அவர், ஒருவரது சிந்தனை, சொல் மற்றும் செயல்களில் இசைவும், சம்பந்தமும் இருக்க வேண்டியதன் அவசியத்தைக் காண்பித்தார். ஒருவர் நல்ல சிந்தனைகள் பெறுவதற்கு மனம் மிகவும் முக்கியமானது என்று பறை சாற்றினார். இந்த சிந்தனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு, சொற்கள் மிகவும் முக்கியமானவை. இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு, ஒருவரது செயல்கள் அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்டவையே.