azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
God is one, but each individual can and must create a form for themselves according to their taste. When salt is in the sea, it is not distinct from the sea. It is a part of the ocean. This salty taste is a quality present in the entire ocean. Do we have to drink and taste the entire ocean to experience this saltiness? One drop of water suffices to tell us that the ocean water is salty. Similarly even if you experience a small part of the aspect of Divine (Brahman) present within your heart, you can understand the divine. There are many tube lights in a home, and we think they are different. Indeed the light coming from each tube light is different, but the current that flows through all the tube lights is the same. All human beings in this world are like tube lights, and God, in the form of Shaktipata (spiritual energy), shines in all human tube lights. (Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 5)
இறைவன் ஒருவனே, ஆனால் ஒவ்வொருவரும், தங்களுக்கு என்றே, அவரவரது விருப்பத்திற்கு ஏற்ற இறை ரூபத்தை உருவாக்கிக் கொள்ளலாம்; கொள்ளவும் வேண்டும்.கடலில் உப்பு இருக்கும் போது, அது கடலிலிருந்து தனிப்பட்டு இல்லை. அது கடலின் ஒரு அங்கமாக இருக்கிறது. இந்த உப்புக் கரிப்பு கடலனைத்திலும் இருக்கும் ஒரு சுவையாகும். இந்த உப்புக் கரிப்பை உணர, நாம் கடலனைத்தையும் குடித்துத் தான் ருசி பார்க்க வேண்டுமா? கடல் நீர் உப்புக் கரிக்கிறது என்று சொல்ல நமக்கு ஒரு துளி கடல் நீர் போதும்.அதைப் போலவே, உங்கள் இதயத்தில் உறையும், பரப்பிரம்மத்தின் ஒரு சிறு அம்சத்தை நீங்கள் அனுபவித்தாலும், உங்களால் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு வீட்டில் பல ட்யூப் லைட்டுகள் உள்ளன; அவை எல்லாம் வெவ்வேறு என நாம் நினைக்கிறோம். உண்மையில் ஒவ்வொரு ட்யூப் லைட்டிலிருந்து வரும் ஒளியும் வெவ்வேறானாலும், அனைத்து ட்யூப் லைட்டுகளிலும் பாயும் மின்சாரம் ஒன்றே. இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ட்யூப் லைட்டுகளைப் போன்றவர்களே; இந்த அனைத்து மனித ட்யூப் லைட்டுகளிலும் இறைவன் ஆத்ம சக்தியாகப் பிரகாசிக்கிறான்.