azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
The five elements that constitute the earth are also controlled by certain laws. Even the infinite ocean moves under certain laws and regulations. In order to get this limitation in the worldly plane, some discipline is necessary. In the context of the whole world, man’s life is only a part. Therefore man’s life has to be regulated. Whether it is for love, for hatred, or for anger, some regulation is necessary. For doing any kind of work in this world, there should be some order and discipline. Any work that you may do without discipline, will not yield good results. That which rules the world is the rule of law. What is required to control oneself and put oneself under the rule of law, is discipline. This control of oneself is like tapas or penance. A life, in which there is no discipline and control, will fail and fall one day or the other. One must recognise the truth that there should be controls on, and limits to, human nature. (Summer Roses On Blue Mountains, 1976, Ch 6.)
இந்த பூமியை உருவாக்கி உள்ள பஞ்ச பூதங்களும் கூட சில விதிகளுக்கு உட்பட்டவையே. அளவிட முடியாத சமுத்திரமும் சில விதி முறைகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.உலகியலாக இந்த வரை முறையைப் பெறுவதற்கு, சில கட்டுப் பாடுகள் தேவை.இந்த உலகனைத்தையும் எடுத்துக் கொண்டால், அதில் மனிதனது வாழ்க்கை ஒரு அங்கம் மட்டுமே. எனவே, மனித வாழ்வும் ஒழுங்கு படுத்தப் பட வேண்டும்.அது அன்போ, த்வேஷமோ அல்லது கோபமோ, சில வரை முறை அவசியமே. இந்த உலகில் எந்தப் பணியையும் ஆற்றுவதற்கு, சில வரைமுறையும், கட்டுப்பாடும் இருந்தே ஆக வேண்டும். ஒழுங்கின்றி நீங்கள் ஆற்றும் எந்தப் பணியும், நல்ல விளைவுகளைத் தர மாட்டா. இந்த உலகை ஆளுவது சட்ட திட்டங்களே. ஒருவர் தன்னையே கட்டுப் படுத்தி, அவரைச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டு வரச் செய்வது, ஒழுக்கமே. இப்படிப் பட்ட கட்டுப்பாடு, தவம் போன்றது.ஒழுக்கமும், கட்டுப் பாடும் அற்ற ஒரு வாழ்க்கை என்றோ ஒருநாள் தோல்வியுற்று, வீழ்ச்சி அடைந்தே விடும். மனித இயல்பிற்கு கட்டுப்பாடுகளும், வரை முறைகளும் இருக்க வேண்டும் என்ற உண்மையை ஒருவர் உணர்தல் வேண்டும்.