azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
During troubled times, some people offer prayers to God believing that God is somewhere else and listening to their prayers, He comes all the way and solves their difficulties! In a worldly plane, if you go to a person in a position of authority and praise them, then they may do good to you! But God is not like someone who is in a position of authority! As soon as you think of God in your mind, His grace will help you. Scriptures declare, Brahma vid Brahmaiva Bhavati (The knowledge of Divine will transform you into God Himself). The result of your prayers is that divine qualities get cultivated within you and give you relief from suffering. Prayers to God, singing His glory, and thinking of Lord’s divine qualities are done only for your own peace and wellbeing, and to develop your good character. Hence promote good ideas, good ideals and good thoughts at all times. (Summer Roses On Blue Mountains, 1976, Ch 4)
கஷ்டப்படும் சமயங்களில், சிலர்,இறைவன் எங்கேயோ இருந்து அவர்களது பிரார்த்தனைகளைக் கேட்டு, அங்கிருந்தே வந்து அவர்களது கஷ்டங்களைத் தீர்க்கிறான் என நம்பி பிராத்தனைகள் செய்கிறார்கள் ! உலகியலானவற்றில், உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சென்று அவரைப் புகழ்ந்தால், அவர்கள் உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடும் ! ஆனால், இறைவன் அதிகாரம் படைத்த உயர் பதவியில் இருக்கும் ஒருவரைப் போல அல்ல!உங்கள் மனதில் இறைவனை எண்ணிய உடனேயே அவனது அருள் உங்களுக்கு உதவும். வேதங்கள், ‘’ ப்ரம்ம வித் ப்ரம்மைவ பவதி’’( இறைவனைப் பற்றிய ஞானம் உங்களையே இறைவனாக மாற்றி விடும்) என்கின்றன.உங்களது பிரார்த்தனையின் பலன் என்ன என்றால், உங்களுள் தெய்வீக குணங்கள் வளர்ந்து, துன்பத்திலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன. இறைவனைப் பிரார்த்திப்பது,அவனது புகழைப் பாடுவது மற்றும் அவனது தெய்வீக குணங்களைச் சிந்திப்பது போன்றவை உங்களது சாந்தி, சந்தோஷங்களுக்காகவும், நல்ல குணநலன்களை வளர்த்துக் கொள்வதற்காகவுமே செய்யப் படுகின்றன.எனவே, எல்லாக் காலங்களிலும் நல்ல கருத்துக்கள்,நல்ல இலட்சியங்கள் மற்றும் நல்ல எண்ணங்களையே ஊக்குவியுங்கள்.