azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Many people perform ritual worship (puja) to God, adore Him and want to follow Him. For whose benefit are these offerings? They are only for our own benefit and not for God’s! Consider this example. When we think of something exciting in our mind, we find that our words show positive energy and our actions also show excitement. On the other hand, if there are sad thoughts in our mind, then our external body will reflect the sadness our mind is experiencing. Take an even simpler example - think of a lime and think that you are cutting it! If you like lime, you will find saliva on your tongue! Actually, the lime juice has not come and touched your tongue. Merely the thought of the lime juice makes your tongue water. So too, people adore and worship God such that by thinking of the good qualities of the Divine, they will also be inspired to cultivate noble qualities. (Summer Roses On Blue Mountains, 1976, Ch 4.)
பல மனிதர்கள் இறைவனுக்கு பூஜை செய்து, போற்றி ,அவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள்.இந்த சமர்ப்பணங்கள் எல்லாம் யாருடைய நன்மைக்காக? அவைகள் நமது சொந்த நன்மைக்கே அன்றி, இறைவனுக்காக அல்ல! இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாம், ஏதாவது உற்சாகம் ஊட்டும் ஒன்றை மனதில் நினைக்கும் போது, நமது வார்த்தைகள்,ஒரு ஆக்க பூர்வமான சக்தியைக் காட்டுவதை நாம் காண்கிறோம்; நமது செயல்களிலும் இந்த உற்சாகம் வெளிப்படுகிறது. அதே சமயம்,நமது மனதில் துக்கமான எண்ணங்கள் இருந்தால், பின் நமது உடலும், நம் மனம் அனுபவிக்கும் துக்கத்தை பிரதிபலிக்கிறது. இதை விட எளிதான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்- ஒரு எலுமிச்சம் பழத்தைப் பற்றி எண்ணி, அதை அறுத்துக் கொண்டு இருப்பதாக கற்பனை செய்யுங்கள்! உங்களுக்கு எலுமிச்சம் பழம் பிடிக்குமானால், உங்கள் நாவில் எச்சில் ஊறுவதைக் காண்பீர்கள் ! உண்மையில் எலுமிச்சம் சாறு வந்து உங்களது நாவைத் தொடவில்லை. எலுமிச்சம் சாறைப் பற்றிய வெறும் நினைப்பே, உங்கள் நாவில் எச்சிலை ஊறச் செய்கிறது. அதைப் போலவே,இறைவனது நல்ல குணங்களை எண்ணி, மனிதர்கள் அவனைப் போற்றிப் பூஜை செய்வதால்,அவர்களும் கூட அந்த சீரிய குணங்களை வளர்த்துக் கொள்வதற்கான உத்வேகம் பெறுகிறார்கள்.