azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
All the five elements have been created by the will of the Supreme. They must be used with reverential care and vigilant discrimination. Reckless use of any of them will only rebound on you with tremendous harm. Nature outside must be handled with discretion, caution and awe. It is the same with our inner 'nature' and internal instruments too! Of these, two are capable of vast harm - the tongue and one’s lust. Since lust is aroused and inflamed by the food consumed and the drink taken in, the tongue needs greater attention. While your eye, ear and nose have single uses, the tongue makes itself available for two purposes: to judge taste and to utter word - symbols of communication. You must control the tongue with double care, since it can harm you in two ways. Patanjali, (The author of Yoga Sutras) has declared that when tongue is conquered, victory is yours! (Divine Discourse, 23-Nov-1968)
பஞ்ச பூதங்களும் இறைவனது ஸங்கல்பத்தால் சிருஷ்ட்டிக்கப் பட்டவையே. அவற்றை பக்திப் பரவசத்துடனான கவனத்துடனும், கண்காணிப்பான பகுத்தறிவுடனும் பயன்படுத்த வேண்டும். அவற்றில் எதையும் பொறுப்பில்லாமல் பயன்படுத்தினால், அதுவே உங்கள் மீது பேரழிவாக திருப்பிப் பாயும். புறத்திலுள்ள இயற்கையை முன்ஜாக்கிரதையுடனும், கவனத்துடனும், பயபக்தியுடனும் கையாள வேண்டும். நமது அகத்திலுள்ள இயற்கை மற்றும் அந்தக்கரணங்களைக் கையாளுவதும் அவ்வாறே! இவற்றில் ஒருவரது நாக்கு, காமம் என்ற இரண்டும் மிகப் பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியவை. காமம், உண்ணும் உணவு மற்றும் உட்கொள்ளப் படும் பானங்களால் தூண்டப்பட்டு கொழுந்து விட்டு எரியுமாதலால், நாக்கிற்கே அதிக கவனம் தேவைப் படுகிறது.உங்களது கண், காது மற்றும் மூக்கு ஆகியவை ஒரே ஒரு வகையில் பயன்படும் போது, நாக்கிற்கு மட்டும் இரண்டு வேலைகள் உள்ளன – செய்தித் தொடர்பின் சின்னங்களான ருசிபார்ப்பதும்,பேசுவதும். நீங்கள் நாவை, அது இரண்டு விதத்தில் உங்களுக்குத் தீங்கிழைக்க வல்லதால், இரட்டை மடங்கு கவனத்துடன் கட்டுப் படுத்த வேண்டும். யோக சூத்திரங்களை இயற்றிய பதஞ்சலி முனிவர், எப்போது நாக்கை வெல்கிறோமோ, அப்போதே வெற்றி உங்களுடையது எனப் பறைசாற்றுகிறார் !