azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
The kind of tree that sprouts will be determined by the nature of the seed. The smell which one gets when one has a belch will be determined by the kind of food one eats. When Krishna was sent to the Kaurava court to undertake peace negotiations, the amount of trouble and the hesitation which the Pandava brothers had is not easily understood by others. The Pandava brothers, particularly Nakula and Sahadeva, were worried that their elder brother was sending Krishna into a court filled with evil people. They were greatly worried about a possible harm these people might do to Krishna. Until Krishna returned safely they did not even take a sip of water. Because the Pandavas had such great faith and affection towards Krishna, Krishna in turn was also protecting them at all times. The kind of connection that exists between God and His devotees is always strengthened by the bonds of love. (Divine Discourse, Summer Roses on Blue Mountains 1976, Ch 4)
விதையின் தன்மையைப் பொறுத்தே முளைக்கும் மரத்தின் தன்மை அமையும். ஒருவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்தே அவர் விடும் ஏப்பம் இருக்கும். கௌரவர்களது சபைக்கு, அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அனுப்பப் பட்டபோது, பாண்டவர்களுக்கு இருந்த துன்பமும், தயக்கமும், எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியது அல்ல.பாண்டவ சகோதரர்களில் குறிப்பாக நகுலனும், சகாதேவனும், தங்களது மூத்த தமயனார், ஸ்ரீகிருஷ்ணரை தீயவர்கள் நிறைந்த சபைக்கு அனுப்புகிறாரே எனக் கவலை கொண்டனர். இவர்கள் கிருஷ்ணருக்கு ஏதாவது தீங்கு செய்து விடுவார்களோ எனக் கவலைப் பட்டனர்.ஸ்ரீகிருஷ்ணர் பத்திரமாகத் திரும்பி வரும் வரை அவர்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தவில்லை. பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் மீது அளவு கடந்த நம்பிக்கையும், பரிவும் இருந்ததால், ஸ்ரீகிருஷ்ணரும் பதிலுக்கு அவர்களை எப்போதும் காத்து வந்தார். இறைவனுக்கும் , அவனது பக்தர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு எப்போதும், ப்ரேம பந்தத்தால் மேலும் வலுவடைகிறது.