azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
As is the common practice even today, the chauffeur of a car is expected to open the door of the car when the owner gets down. One day, in Mahabharatha, after war, when the chariot returned and stood in front of his house, Arjuna insisted on Lord Krishna, his charioteer, getting down first and opening the door. Krishna disagreed and, in a strong language, admonished Arjuna, asking him to get down first and go inside. Not recognising the inner significance of Krishna’s words, Arjuna reluctantly accepted and no sooner did he go inside, Krishna jumped out of the chariot. The next moment, the entire chariot was in flames. When the surprised Pandavas asked why did the chariot get burnt, Krishna explained that all the powerful arms from the battle were subdued and kept under His feet; now when He left the chariot, they exploded. God always plans and takes care to protect His devotees from harm. (Divine Discourse, Summer Roses on Blue Mountains 1976, Ch 3)
ஒரு டிரைவர்,அவரது முதலாளி இறங்கும்போது, காரின் கதவைத் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றும் கூட நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். மஹாபாரதப் போரில் ஒரு நாள், அன்று யுத்தம் முடிந்தவுடன்,அவனது தேர் திரும்பி வந்து ,தனது பாசறையின் முன் நின்றபோது, அர்ஜூனன், தனது சாரதியான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் முதலில் இறங்கி வந்து அதன் கதவைத் திறக்க வேண்டும் என வற்புறுத்தினான். அதற்கு மறுத்த ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனைக் கடுமையான வார்த்தைகளால், கண்டித்து, அவனை முதலில் இறங்கி உள்ளே போகுமாறு கூறினார்.ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளில் இருந்த உள் அர்த்தத்தை உணராத அர்ஜூனன், விருப்பமின்றி அதை ஏற்றுக் கொண்டான்; அவன் இறங்கி உள்ளே சென்ற உடனேயே ஸ்ரீகிருஷ்ணர் தேரில் இருந்து வெளியில் குதித்து விட்டார். அடுத்த கணமே, அந்தத் தேர் பற்றி எரியத் தொடங்கி விட்டது. ஆச்சரியத்தில் ஆழ்ந்த பாண்டவர்கள் அந்தத் தேர் ஏன் எரிந்தது எனக் கேட்டபோது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் , எதிரிகள் தொடுத்த மிகச் சக்தி வாய்ந்த போர்க் கணைகள் அடங்கி ஒடுங்கி அவரது காலடியில் கிடந்தன என்றும்,,அவர் தேரை விட்டுச் சென்று விட்டார் என்ற உடனேயே அவை வெடித்து விட்டன என்றும் விளக்கம் அளித்தார். இறைவன் , எப்போதும், திட்டமிட்டு, தனது பக்தர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான்.