azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
The word surrender has been misinterpreted and people promote idleness in the name of surrender. We think that our mind and body have been surrendered to the Lord. Your mind is not under your own control, how then can you hold it and give it to the Lord? You have no control over your own body too. So to say that you have surrendered your mind and body to the Lord is untrue. The flute is a very good example of an instrument close to the Lord and the one great quality in the flute is its complete surrender. There is nothing left in the flute, there are no residual desires. In fact, the inside of the flute is completely hollow. The flute has nine holes in it, and the flute of our body has nine holes too. That flute has been able to go close to the Lord because it is completely hollow. So also, if we can remove all the pulp of desires from our body, then there is no doubt that this flute of our body can also go close to the Lord. (Divine Discourse, Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 3)
சரணாகதி என்ற வார்த்தை தவறாக விளக்கப் பட்டு,மனிதர்கள், சரணாகதி என்ற பெயரில் சோம்பேறித்தனத்தை வளர்க்கிறார்கள்.நமது உடலும் ,மனமும் இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டதாக நாம் நினைக்கிறோம். உங்கள் மனம் உங்கள் வசத்திலேயே இல்லாத போது, அதைப் பிடித்து எவ்வாறு இறைவனிடம் கொடுக்க உங்களால் முடியும்? உங்கள் சொந்த உடலின் மீதும் கூட உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை.எனவே, நீங்கள் உங்கள் உடலையும், மனதையும் இறைவனிடம் சரணாகதி அடையச் செய்து விட்டீர்கள் என்று கூறுவது உண்மையல்ல.இறைவனுக்கு மிகவும் நெருக்கமான இசைக் கருவிக்கு புல்லாங்குழல் ஒரு நல்ல உதாரணம்;புல்லாங்குழலின் தலை சிறந்த குணம் பரிபூரண சரணாகதியாகும்.புல்லாங்குழலில் எதுவுமே இல்லை; அதில் மீதி ஒட்டிக் கொண்டு இருக்கும் ஆசைகள் இல்லை. உண்மையில் அதன் உட்புறம் முழுமையாகக் காலியாகவே இருக்கிறது. புல்லாங்குழலில் ஒன்பது ஓட்டைகள் உள்ளன; நமது உடல் எனும் புல்லாங்குழலிலும் ஒன்பது த்வாரங்கள் உள்ளன. முழுமையாக வெற்றிடமாக இருப்பதால் தான் , புல்லாங்குழல் இறைவனுக்கு மிக அருகாமையில் செல்ல முடிகிறது.அதைப் போலவே, நாம் நமது உடலிலிருந்து அனைத்து ஆசைக் குழம்புகளையும் நீக்கி விட முடிந்தால், நமது உடல் எனும் புல்லாங்குழலும் இறைவனுக்கு அருகில் செல்ல முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.