azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
When you wear a wristwatch, and someone asks where it was manufactured, you will state that it was made by a Swiss company. We have neither seen the Swiss company nor the watch manufacturer, but are using the watch. Did this watch appear miraculously or did someone take time to manufacture this? You agree that the knowledge and process of assembling watches must exist somewhere and we readily accept that some individual has assembled this watch. If a watch has a creator, what about the Universe? Who can create all these things which are so permanent and steady? When we ask such a question, people simply push away the question and say that these are natural. They do not recognise the creator who has created all this. Not to accept the existence of such a creator is to be foolish and hard-headed. (Divine Discourse, Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 3)
நீங்கள் ஒரு வாட்சை அணிந்திருக்கும் போது, யாராவது அது எங்கே தயாரிக்கப் பட்டது என்று கேட்டால், நீங்கள் அது ஒரு ஸ்விஸ் நிறுவனம் தயாரித்தது என்று கூறுவீர்கள்.நாம் ஸ்விஸ் நிறுவனமத்தையோ அல்லது வாட்ச் தயாரிப்பாளரையோ பார்த்ததில்லை, ஆனால் அந்த வாட்சை உபயோகிக்கிறோம். இந்த வாட்ச் அற்புதகரமாக தோன்றியதா அல்லது இதைத் தயாரிக்க யாராவது நேரத்தை எடுத்துக் கொண்டாரா? வாட்சுகளைத் தயாரிப்பதற்கான அறிவும்,முறையும் எங்கோ இருந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்; மேலும் யாரோ ஒருவர் இந்த வாட்சைத் தயாரித்திருக்கிறார் என்பதையும் நாம் உடனே ஒப்புக் கொள்கிறோம்.இந்த ஒரு வாட்சிற்கே ஒரு சிருஷ்டி கர்த்தா இருக்கும் போது, இந்த பிரபஞ்சத்திற்கு ? இப்படி நிரந்தரமாகவும், நிலையாகவும் இருக்கும் இந்த அனைத்தையும் யாரால் சிருஷ்டிக்க முடியும்? இப்படி நாம் கேள்வி கேட்டால், மனிதர்கள் இதை, இவை எல்லாம் இயற்கை என்று கூறி ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். இவை அனைத்தையும், சிருஷ்டித்தவரை, அவர்கள் உணருவதில்லை.இப்படிப் பட்ட ஒரு சிருஷ்டி கர்த்தா இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது முட்டாள் தனமும், மண்டைக் கனமும் ஆகும்.