azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
In order to save His devotees, God takes many different actions in several ways. Devotees, unable to recognise and understand the inner meaning of such actions, think that God is giving them unnecessary difficulties. People only have external vision. God has inner vision. Paramatma is always caring for the well-being of His people. Even if a son, who has been brought up with much care by the mother, makes a mistake, the mother will correct the son and punish if appropriate. When we see this, we feel that a mother who has brought up the son with such care, love, and tenderness is harsh in punishing the child; but the mother does so with affection. In the same manner—God, the universal father, will punish His devotees, when needed, with love. Do not mistake it to be God desiring to punish people. God is always full of grace. [Divine Discourse, Summer Showers in Brindavan, 1976, Ch 3]
தனது பக்தர்களைக் காப்பதற்கு,இறைவன் பல வழிகளில், பல விதமான செயல்களை ஆற்றுகிறான். பக்தர்கள்,இப்படிப் பட்ட செயல்களின் உள் அர்த்தத்தை உணரவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாமல், இறைவன் அவர்களுக்குத் தேவையற்ற இன்னல்களைத் தருகிறான் என்று எண்ணுகிறார்கள். மனிதர்களுக்கு வெளிப்படையான திருஷ்ட்டியே உள்ளது. இறைவன் உள்ளார்ந்த திருஷ்டி படைத்தவன்.பரமாத்மா எப்போதும் தனது மக்களின் க்ஷேமத்தைப் பற்றியே அக்கறை கொண்டவனாக இருக்கிறான். மிகவும் பரிவுடன் ஒரு தாயால் பேணி வளர்க்கப் பட்டிருந்தாலும் கூட, ஒரு மகன் தவறு செய்வானே ஆகில், தாயானாவள் அவனைத் திருத்தி, தேவையான தண்டனையையும் அளிப்பாள். இதைப் பார்க்கும் நாம், இவ்வளவு பரிவு ,அன்பு மற்றும் கனிவுடன் இந்த மகனை வளர்த்த ஒரு தாய், அந்தக் குழந்தையைத் தண்டிப்பது கடுமையாக இருப்பதாக நினைக்கிறோம்; ஆனால் ஒரு தாய் அதை ஒரு பரிவுடன் தான் செய்கிறாள். அதைப் போலவே, இந்த பிரபஞ்சத்தின் தந்தையான இறைவன், அவனது பக்தர்களை, தேவையான போது, அன்புடன் தண்டிக்கிறார். இறைவன், மனிதர்களைத் தண்டிப்பதை விரும்புவன் என தவறாக எண்ணாதீர்கள். இறைவன் எப்போதும் அருள் நிறைந்தவன்.