azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Lord Krishna made a sacred determination that he would bring peace and happiness to all by setting a personal example. He radiated happiness, irrespective of whether he was in a battlefield, cremation ground or in a peaceful place. This was a great quality of Lord Krishna. We sing only in our happy moments, but Lord Krishna was singing even in a battlefield and was exuding happiness. He was always in bliss. Look at the root meaning of the name Krishna: ‘One who is an object of attraction to everyone is Krishna.” The other meaning is ‘Karshayateethi Krishna - Krishna is one who ploughs the field’. Realise that the field that Krishna ploughs is the field of your heart. By ploughing your heart, He generates the fruits of peace and distributes them amongst the human beings. Such is the ideal picture of Krishna which we should form in our mind. [Divine Discourse, Summer Roses on Blue Mountains 1976, Ch 3]
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தன்னுடைய முன்னுதாரணத்தின் மூலம், அனைவருக்கும் சாந்தி,சந்தோஷங்களை கொண்டு வருவேன் என்ற புனித ஸங்கல்பம் செய்து கொண்டார்.அவர் யுத்த களமோ, சுடுகாடோ அல்லது அமைதியான இடமோ எங்கிருந்தாலும், மகிழ்ச்சியுடன் பிரகாசித்தார்.இது பகவான் ஸ்ரீகிருஷ்ணரது மிகச் சிறந்த குணமாகும். நாம் சந்தோஷகரமான சமயங்களில் மட்டுமே பாடுவோம், ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ யுத்த களத்தில் கூடப் பாடிக்கொண்டு, மகிழ்ச்சியையே வெளிப்படுத்தினார்.அவர் எப்போதும் ஆனந்த மயமாக இருந்தார்.’’ கிருஷ்ண’’ என்ற நாமத்தின் அடிப்படை அர்த்தத்தைப் பாருங்கள்- ‘’ ஒவ்வொருவரையும் கவர்ச்சியால் ஈர்ப்பவரே கிருஷ்ணர்’’, இதன் மற்றொரு பொருள்,’’ கர்ஷயதே இதி க்ருஷ்ண- நிலத்தை உழுபவரே கிருஷ்ணர் என்பதாகும். ஸ்ரீகிருஷ்ணர் உழும் நிலம், உங்களது இதயமே என்பதை உணருங்கள். உங்களது இதயதமெனும் நிலத்தை உழுவதன் மூலம், அவர் சாந்தியின் பழங்களை உருவாக்கி, அவற்றை மனிதர்களிடையே பகிர்ந்தளிக்கிறார். நாம் மனதில் கொள்ள வேண்டியது ஸ்ரீகிருஷ்ணரின் இந்த இலட்சிய ஸ்வரூபத்தையே .