azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

You should never undertake to discuss the good and bad in others. If you entertain bad qualities in your mind, it will lead you to a bad path and you will surely fall. People who entertain bad ideas will certainly be destroyed in course of time despite any amount of wealth or knowledge that they may possess. An individual, who endeavours to keep away the bad in oneself and attempts to promote the good, will make real progress. If you use a thousand eyes for locating the faults in others and spend all your time in this process, your heart will get impure and will develop bad ideas. Our heart is like a camera lens. The object on which we concentrate our attention gets imprinted on the mind. Youth and elders alike should try to see that qualities like jealousy, hatred and lack of forbearance never enters their minds. [Divine Discourse, Summer Showers in Brindavan, 1974, Vol 1, Ch 2]
பிறரது நல்லவை, கெட்டவைகளை நீங்கள் ஒருபோதும் விவாதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் மனதில் கெட்ட குணங்களுக்கு இடமளித்தால், அது உங்களைத் தீய பாதையில் இட்டுச் செல்லும்; நீங்கள் நிச்சயம் வீழ்ச்சி அடைவீர்கள். தீய எண்ணங்களுக்கு இடமளிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு செல்வமோ அல்லது பாண்டித்யமோ பெற்றவர்களாக இருந்தாலும், காலப்போக்கில் கண்டிப்பாக அழிக்கப் படுவார்கள்.தீயனவற்றை தன்னிடமிருந்து ஒதுக்கி வைத்து, நல்லவற்றை வளர்க்கப் பாடுபடும் ஒருவர், உண்மையான முன்னேற்றம் அடைவார். பிறரிடம் உள்ள தவறுகளைக் கண்டறிய நீங்கள் ஆயிரம் கண்களைப் பயன்படுத்தி, இதில் உங்களது அனைத்து நேரத்தையும் செலவழிப்பீர்களே ஆனால் , உங்கள் இதயம் மாசடைந்து,தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும். நமது இதயம் ஒரு கேமராவின் லென்ஸைப் போன்றது. நாம் எந்தப் பொருளின் மீது நமது கவனத்தைக் குவிக்கிறோமோ, அதுவே நமது மனதில் பதிந்து விடுகிறது. இளைஞர்களும், பெரியோர்களும் ஒன்றே போல,பொறாமை, த்வேஷம் மற்றும் சகிப்பின்மை போன்ற குணங்கள் ஒருபோதும் அவர்களது மனங்களில் நுழையாமல் பார்த்துக் கொள்ள முயல வேண்டும்.