azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Many men are accustomed to shaving and they know that if they press the razor too hard they will cut the skin and if they do not press at all, it will not be possible to remove the unwanted hair. Only when they apply moderate pressure they will be able to attain the necessary result. The human mind is like a razor’s edge. Without controlling the mind too rigidly and without allowing it to go too freely, we should encourage it to do good acts, and we should control it when there is any tendency to participate in bad deeds. Only when your mind behaves in a manner in which it ought to, you can conduct yourself as a human being. Hence you must discriminate and distinguish between good and bad acts, and guide the mind in a moderate manner between the two extremes. (Divine Discourse, Summer Showers in Brindavan 1974, Ch 2)
பல ஆண்கள் ஷேவிங் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்; அவர்கள் ரேஸரை அதிகமாக அழுத்தினால், சருமத்தை வெட்டிக் கொள்வார்கள் என்பதையும், அதை அழுத்தாமலே இருந்தால், தேவையில்லாத முடியை நீக்க முடியாது என்பதையும் அறிவார்கள். எப்போது அவர்கள் மிதமான அழுத்தம் கொடுக்கிறார்களோ அப்போது மட்டும் தான் தேவையான பலன் கிடைக்கும்.மனித மனமும் ரேஸரின் முனையைப் போன்றதே. அதிகக் கண்டிப்புடன் கட்டுப் படுத்தாமலும்,அதிகத் தன்னிச்சையாகப் போக விடாமலும், நாம் அதை நல்ல செயல்களை ஆற்ற ஊக்குவிக்க வேண்டும்;தீய செயல்களில் பங்கு ஏற்பதற்கான எந்த விதமான மனப்பாங்கு இருக்கும் போது, அதை நாம் கட்டுப் படுத்த வேண்டும்.உங்கள் மனம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ , அவ்வாறு நடந்து கொள்ளும் போது தான், நீங்கள் ஒரு மனிதனாக நடந்து கொள்ள முடியும்.எனவே, நீங்கள் பகுத்தறிந்து, நல்ல,கெட்ட செயல்களை இனம் கண்டு ,மனதை இந்த இரண்டு எதிரெதிரான உச்ச நிலைகளுக்கு இடையில், மிதமாக வழி நடத்திச் செல்ல வேண்டும்.