azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
The Vedas advocate us to sacrifice everything, and through sacrifice we would be able to have vision of the Divine within. The creation and its maintenance depends only on sacrifice. If there is no sacrifice, there will be no life, and the society will not remain intact. Even from a worldly perspective, if we do not give out the breath that we take in, we cannot live. If blood is not constantly flowing from one place to another every instant, we cannot live. Unless the clouds give up the water they have gathered, they cannot remain as clouds. That is why it is said, what you cannot get by your knowledge and effort can be got by sacrifice. If we think that something is good and welcome it, some bad too may come in the process. That which gives you happiness when it comes will also cause sorrow when it goes away from you. Whether it is the good or the bad, we have to sacrifice continuously. (Summer Showers in Brindavan, 1974, Vol 1, Ch 2.)
வேதங்கள் நம்மை அனைத்தையும் தியாகம் செய்யுமாறும், தியாகத்தின் மூலம் நாம் ஆத்ம சாக்ஷாத்காரம் பெற முடியும் எனவும் அறிவுறுத்துகின்றன. படைப்பும், அதன் காப்பும் தியாகத்தை மட்டுமே சார்ந்திருக்கின்றன.தியாகம் இல்லை என்றால், வாழ்க்கை இல்லை; இந்த சமுதாயம் ஒன்றாக இருக்க முடியாது. உலகியலான நோக்கில் பார்த்தாலும் கூட, நாம் உள் வாங்கிய மூச்சை வெளியில் விடவில்லை என்றால், நாம் உயிரும் இருக்க முடியாது.இரத்தம், ஒவ்வொரு கணமும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, இடையறாது செல்லவில்லை என்றால், நாம் வாழ முடியாது.மேகங்கள் தாங்கள் சேகரித்த நீரைப் பொழியவில்லை என்றால், அவை மேகங்களாக இருக்க முடியாது. அதனால் தான், உங்களது அறிவு மற்றும் முயற்சியால் பெற முடியாதவற்றை எல்லாம் தியாகத்தால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. நாம் சிலவற்றை நல்லவை என்று எண்ணி வரவேற்றால், அதனுடன் கூடவே சில கெட்டவையும் வந்து சேரக் கூடும். வரும்போது உங்களுக்கு மகிழ்ச்சி தருபவை, அவை உங்களை விட்டுப் போகும் போது, உங்களுக்குத் துக்கத்தை ஏற்படுத்தும். நல்லவையோ அல்லது கெட்டவையோ, நாம் இடையறாது தியாகம் செய்தே ஆக வேண்டும்.