azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

In this world, there are many types of relationships, but none equals the relationship that exists between the mother and the child. It is because of this intimate relationship with the mother that one’s own country is called motherland. Similarly one’s own language is called mother tongue, and not father tongue. Among the parents, the first place is given to the mother; next comes the father. Not only in day-to-day life but also in the field of spirituality, mothers and women are given the highest regard. For example, when we mention the names of divine couples such as Sita Rama, Radha Krishna, Lakshmi Narayana, etc., the names of the goddesses come first. What is the inner significance of this? Mother represents Nature, which is the manifest aspect of Divinity. (Divine Discourse, 6 May 1999)
இந்த உலகில் பல உறவுகள் இருந்தாலும், ஒரு தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவிற்கு ஈடானது எதுவுமில்லை.தாயோடு உள்ள இந்த நெருங்கிய உறவின் காரணமாகத்தான் ஒருவரது சொந்த நாடு தாய்நாடு என அழைக்கப் படுகிறது.அதைப் போலவே, ஒருவரது சொந்த மொழி தாய் மொழி என்று அழைக்கப் படுகிறதே அன்றி தந்தை மொழி என்று அல்ல. பெற்றோர்களில் தாய்க்கே முதல் இடம் கொடுக்கப் படுகிறது; தந்தை அடுத்த படியாகத் தான் வருகிறார். நடை முறை வாழ்க்கையில் மட்டும் அல்லாது ,ஆன்மீகத் துறையிலும், தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் மிக உயர்ந்த நிலை கொடுக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, நாம் தெய்வீக தம்பதிகளின் பெயர்களை, அதாவது, சீதாராமா, ராதாகிருஷ்ணா,லக்ஷ்மி நாராயணா என்று கூறும்போது, தேவியர்களின் பெயர்களே முதலில் வருகின்றன. இதன் உட்பொருள் என்ன? தெய்வீகத்தின் வெளிப்பாட்டு அம்சமான இயற்கையையே, தாய் குறிக்கிறாள் என்பதாகும்.