azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Never look down upon any woman. They are most virtuous. With all sacred feelings in your heart, respect women and be respected. Love and Respect your mother, obey her commands. Never disrespect your mother or hurt her feelings. Try to satisfy her in all respects. Only then will the seed of devotion sprout in you. Mother protects her children in many ways. Even after death, she will come back and help you. Everyone should follow the dictum, Mathru Devo Bhava (Mother is God) in letter and spirit, and receive their mother's love. Mother Easwaramma was full of love and sacrifice and she led a life of fulfillment and peace. In order to propagate this sacred ideal, this day is being celebrated as Easwaramma Day. This is to emphasise that each one of you should make your mother happy. If your mother is happy, Swami is happy. (Divine Discourse, 6 May 1999)
எந்தப் பெண்ணையும்,ஒருபோதும், தாழ்வாக எண்ணாதீர்கள்.அவர்கள் நல்லொழுக்கம் மிகுந்தவர்கள்.உங்கள் இதயத்தில், அனைத்து புனித எண்ணங்களுடனும், பெண்களை மதித்து, நீங்களும் மதிக்கப் படுங்கள். உங்களது தாயை நேசித்து, மதித்து, அவளது கட்டளைகளுக்கு அடி பணியுங்கள். உங்கள் தாயை ஒரு போதும் அவமதிக்கவோ அல்லது அவளது உணர்வுகளைப் புண்படுத்தவோ செய்யாதீர்கள்.அவளை எல்லா விதத்திலும் திருப்திப் படுத்த முயற்சி செய்யுங்கள். அதன் பிறகே உங்களுள் பக்தி வித்திடும்.தாய் தனது குழந்தைகளை பல விதங்களில் காப்பாற்றுகிறாள். இறப்பிற்குப் பிறகும் கூட அவள் திரும்பி வந்து, உங்களைக் காத்திடுவாள்.ஒவ்வொருவரும் ‘’ மாத்ரு தேவோ பவ ‘’( தாயே கடவுள் ) என்ற கோட்பாட்டை முழுமையாகப் பின்பற்றி , அவர்களது தாயின் அன்பைப் பெற வேண்டும். அன்னை ஈஸ்வராம்மா அன்பும், தியாகமும் நிறைந்தவராய், பரிபூரணத்துவமும்,சாந்தியும் நிறைந்த வாழ்க்கையை நடத்தினார். இந்தப் புனித இலட்சியத்தைப் பரப்பும் பொருட்டு, இன்றைய நாள் ஈஸ்வராம்மா தினமாகக் கொண்டாடப் படுகிறது. இது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது தாயை சந்தோஷப் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே. உங்கள் அன்னை சந்தோஷப் பட்டால், ஸ்வாமியும் சந்தோஷப் படுவார்.