azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
There may be a wicked son, but not a wicked mother. It is because of the noble feelings of the mothers that sons become virtuous, intelligent, attain exalted positions and earn name and fame. It is the mother who fosters and nourishes you. It is she who knows your choices and preferences, and fulfils all your needs. So be grateful to your mother always. First and foremost, you should show gratitude to your parents, love them, and respect them. Your blood, your food, your head, and your money are all the gifts of your parents. You do not receive these gifts directly from God. All that is related to God is only indirect experience. It is only the parents whom you can see directly and experience their love. So, consider your parents as God. God will be pleased and will manifest before you only when you love and respect your parents. (Divine Discourse, 6 May 1999)
ஒரு கொடிய மகன் இருக்கக் கூடும்,ஆனால் ஒரு கொடிய தாய் இருக்க முடியாது. தாய்மார்களின் சீரிய உணர்வுகளின் காரணமாகத் தான், மகன்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், புத்திசாலிகளாகவும் ஆகி, உயர்ந்த பதவிகளை அடைந்து பேரும் , புகழும் பெறுகிறார்கள்தாயே உங்களைப் போஷித்துப் பேணுகிறார். அவளே உங்களது விருப்பு, வெறுப்புக்களை அறிந்து, உங்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாள்.எனவே, உங்கள் தாய்க்கு எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருங்கள்.முதன் முதலில், நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு உங்களது நன்றியுணர்வைக் காட்டி, அவர்களை நேசித்து, மதிக்க வேண்டும். உங்களது ரத்தம், உணவு, புத்தி மற்றும் பணம் ஆகிய அனைத்தும் ( ப்ளட்டு, ஃபுட்டு, துட்டு, ஹெட்டு) உங்கள் பெற்றோர்கள் அளித்த பரிசுகளே.இந்தப் பரிசுகளை நீங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து பெறுவதில்லை. இறைவன் சம்பந்தப் பட்ட அனைத்தும் மறைமுகமான அனுபவங்களே. பெற்றோர்களையே, நீங்கள் நேரடியாகக் கண்டு, அவர்களது அன்பை அனுபவிக்க முடிகிறது.எனவே, உங்களது பெற்றோர்களை இறைவனாகவே கருதுங்கள். நீங்கள் உங்களது பெற்றோர்களை நேசித்து மதித்தால் மட்டுமே, இறைவன் மகிழ்ச்சி அடைந்து, உங்கள் முன் காட்சி அளிப்பான்.