azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Don’t look upon Rama as a scion of the Solar Dynasty, or the son of Emperor Dasaratha. These correlates are but accessory and accidental. A habitual error in modern readers is they pay attention only to the personal relationship and affiliations between the characters of the story they read without delving into the values they represent and demonstrate. Just as people squeeze juice out of the fibrous cane and drink its sweetness, just as the bee sucks the honey in the flower, regardless of its symmetry and colour, so too the spiritual seeker (Sadhaka) should yearn to imbibe the expression of tenderness, pity and compassion with which Ramayana is saturated, paying no heed to other subjects. Those who seek the expression of compassion in Ramayana should concentrate more on the central narrative than on supplementary details that embellish or encumber it. Listen to the Ramayana in that mood; that is the best form of spiritual listening (Shravana). (Ramakatha Rasavahini, Ch 1)
ஸ்ரீராமரை சூரிய வம்ஸ குல திலகமாகவோ அல்லது தசரதனின் மைந்தனாகவோ மட்டுமே கருதாதீர்கள்.இந்த சம்பந்தங்கள் இருந்தாலும் அவை உபரியானவை மற்றும் யதேச்சையாக நிகழ்ந்தவை. நவீன காலப் படிப்பவர்களின் வழக்கமான தவறு என்ன என்றால், அவர்கள் கதா பாத்திரங்கள் எடுத்துக் காட்டி விளக்கும் பண்புகளை ஆழ்ந்து ஆராயாது, அவைகளின் சொந்த உறவுகள் மற்றும் சம்பந்தங்களின் மீது கவனம் செலுத்துகிறார்கள். எவ்வாறு மக்கள் கரும்புத் தண்டைப் பிழிந்து அதன் சாறை எடுத்து, அதன் இனிமையைச் சுவைக்கின்றார்களோ ஒரு மலரின் வண்ணமும், வடிவமும் எப்படி இருந்தாலும் எவ்வாறு ஒரு தேனீ அதிலிருந்து தேனை உறுஞ்சுகிறதோ, அவ்வாறே ஒரு ஆன்மீக சாதகனும் , ஸ்ரீமத்ராமாயணத்தில், பிற விஷயங்களைக் கருதாது, அதில் ததும்பி இருக்கும் இதமான உணர்வு,பரிவு மற்றும் கருணையை உள்ளீர்த்துக் கொள்வதற்குப் பாடு பட வேண்டும்.ஸ்ரீமத் ராமாயணத்தில் உள்ள கருணை உணர்வைத் தேடுபவர்கள் அதன் மையக் கருத்தில் கவனம் வைக்க வேண்டுமே அன்றி, அதற்கு மெருகூட்டும் அல்லது தடை செய்யும் உபரி விஷயங்களின் மீது அல்ல. அந்த மன நிலையில் ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேளுங்கள்; அதுவே சிறந்த ஸ்ரவணமாகும்.