azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
As the human body is made of blood cells, the Ramayana too is constituted of sacred and sublime cells. Human life finds fulfilment by dwelling on the sanctity of the Ramayana. As the human body collapses without the spinal column, so also human life sinks without morality and spirituality. The spinal column is made of thirty-three rings, and it supports the entire human body. Similarly, moral and spiritual principles constitute the very rings of the backbone of human life. My earnest wish is that students evince keen interest in the moral and spiritual principles of the Ramayana and fully benefit from it. The elders too should mould their lives in consonance with morality and spirituality. Neither wealth nor scholarship can bring you happiness. Only the love of God confers endless bliss on you. It not only bestows happiness but gives immense strength as well. Summer Showers Ch1, May 20, 1996.)
எவ்வாறு மனித உடல் இரத்த உயிரணுக்களால் ஆக்கப் பட்டுள்ளதோ, அதே போல ஸ்ரீமத் ராமாயணமும் கூட புனிதமான மற்றும் புடமிடப்பட்ட அணுக்களால் ஆக்கப் பட்டதாகும். ஸ்ரீமத் ராமாயணத்தின் புனிதத்துவதை தியானிப்பதால், மனித வாழ்க்கை பூரணத்துவமடைகிறது.எவ்வாறு மனித உடல் முதுகெலும்பு இல்லை என்றால் சரிந்து போகிறதோ, அவ்வாறே மனித வாழ்க்கையும் அறநெறியும்,ஆன்மீகமும் இல்லை எனில் தகர்ந்து விடுகிறது.முதுகுத் தண்டு 32 வளையங்களால் ஆனது; அது மனித உடல் முழுவதையும் தாங்குகிறது. அதைப் போலவே, அறநெறி மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகள் மனித வாழ்க்கையின் முதுகெலும்பு வளையங்களே. ஸ்ரீமத் ராமாயணத்தின் அறநெறி மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளில் மாணவர்கள் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு, அதிலிருந்து முழுப் பயனையும் பெற வேண்டும் என்பதே என் அவா.பெரியவர்களும் கூட தங்களது வாழ்க்கைகளை அறநெறி மற்றும் ஆன்மீகத்திற்கு இசைந்தவாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும். பணமோ அல்லது பாண்டித்யமோ உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்க முடியாது. இறைவன் பால் கொள்ளும் அன்பு மட்டுமே உங்களுக்கு முடிவே இல்லாத ஆனந்தத்தை அளிக்கிறது.அது ஆனந்தத்தை அளிப்பதோடு அல்லாமல் அளவற்ற வலிமையையும் அளிக்கும்.