azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Ages have gone by and the world is fast changing, but there is no transformation in the human heart. Some say that education is bringing about a change in human beings. True, but what type of change has it brought? It is a peculiar change that is leading to perversion of human mind instead of transforming their hearts. Human heart in its pristine state is highly sacred and human birth is difficult to attain. Out of all the living beings, the human birth is the rarest (Janthunam narajanma durlabham). Having attained such a precious life, are you making efforts to live like a true human being? Today you have become a bundle of desires, spending all your time and effort in fulfilling them. You are under the mistaken notion that fulfilment of desires will confer happiness on you. Realise that only annihilation of desires will lead you to ultimate bliss. True happiness lies in the state of desirelessness. (Divine Discourse, Apr 13, 2002)
யுகங்கள் பல கடந்து விட்டன, உலகம் வேகமாக மாறிக் கொண்டு இருக்கிறது; ஆனால் மனித இதயங்களில் எந்த மாற்றமும் இல்லை.சிலர், கல்வி மனிதர்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்று கூறுகிறார்கள். உண்மையே, ஆனால் எந்த விதமான மாற்றத்தை அது கொண்டு வந்துள்ளது? இதயங்களின் மாற்றமில்லாது, அது மனித மனத்தின் வக்கிரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு விசித்திரமான மாற்றமே. மனித இதயம் அதன் ஆதி நிலையில் மிகவும் புனிதமானதும் மேலும் மனிதப் பிறவி பெறுவது மிகவும் கடினமானதும் ஆகும். அனைத்து ஜீவராசிகளிலும் மனிதப் பிறவியே மிகவும் அரிதானதாகும் ( ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம் ). இப்படிப் பட்ட விலை மதிக்கமுடியாத மனிதப் பிறவியை அடைந்த பின்னும், நீங்கள் ஒரு உண்மையான மனிதனாக வாழ முயற்சிகள் செய்கிறீர்களா? இன்று நீங்கள் ஆசைகளில் ஒரு மூட்டையாக ஆகி, உங்களது அனைத்து நேரம் மற்றும் முயற்சியை, அவற்றைப் பூர்த்தி செய்வதிலேயே கழிக்கிறீர்கள். ஆசைகள் பூர்த்தி அடைந்தால் ,நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்ற தவறான எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆசைகளை அறவோடு அழிப்பதில் தான் இறுதியான ஆனந்தம் இருக்கிறது என்பதை உணருங்கள். உண்மையான ஆனந்தம், ஆசைகளற்ற நிலையில் தான் இருக்கிறது.