azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 06 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 06 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Bear in mind that youth is the most precious years in one's life and should not be wasted or misspent. To let children watch television from 6 to 10 p.m. is to make them forget all that they have learnt at school or college. In addition, they learn many evil things. If TV is used for teaching good things, it can serve a worthy purpose. But that is not the case, younger generation is being ruined by undesirable films and programs. Their minds are being poisoned. It is not a sign of parental love to let children grow in this manner. Even parents should avoid going to cinemas. All crimes and violence we witness today are largely the result of the evil influence of films on young minds. While science and technology may appear, to confer many benefits, they also have many harmful effects. To make proper use of scientific knowledge we must have the wisdom and discrimination. (Divine Discourse, Feb 5, 1984)
வாலிபப் பருவமே, ஒருவரது வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத வருடங்கள் என்பதையும், அவற்றை வீணடிக்கவோ அல்லது தவறாகச் செலவழிக்கவோ கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளை மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை டிவி பார்க்க விடுவது, அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் கற்ற அனைத்தையும் மறந்து விடச் செய்வதற்கே.மேலும் அவர்கள் தீயவையான பலவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள்.டிவி, நல்ல விஷயங்களை போதிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டால், அது ஒரு போற்றத் தக்க ஒரு காரணத்திற்கு உதவுகிறது. ஆனால் அது அவ்வாறு இன்றி, இளைஞர் சமுதாயம் விரும்பத் தாகாத சினிமாப் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளால் நாசமாக்கப் படுகின்றது. அவர்களது மனங்கள் விஷமயமாக்கப் படுகின்றன. பெற்றோர்களது அன்பின் அறிகுறி குழந்தைகளை இவ்வாறு வளர விடுவதல்ல. பெற்றோர்களே சினிமாவிற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இன்று நாம் காணும் அனைத்து குற்றங்களும் வன்முறைகளும், பெரும்பாலும், இளம் மனங்களில் சினிமாவினால் ஏற்படும் தீய பாதிப்புக்களின் விளைவுகளே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பல நன்மைகளைத் தந்திருப்பதாகத் தோன்றினாலும்,அவை பல தீய விளைவுகளையும் கொண்டவையே.விஞ்ஞான அறிவை முறையாகப் பயன்படுத்துவதற்கு, நமக்கு விவேகமும், பகுத்தறிவும் இருக்க வேண்டும்.