azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Geetha says: Shraddhavan labhate jnanam (The persevering seeker secures wisdom). This means that without perseverance and earnestness, no success can be achieved. You must develop interest and devote attention to the path shown by elders and to the knowledge taught by scriptures. You must pay heed to what the elders say. If you have no earnestness (shraddha) you cannot achieve anything, despite your worldly qualifications. Despite ages of evolution and considerable progress in scientific knowledge, people are unable to make significant progress towards the Divine because of absence of strenuous striving in the spiritual sphere. Study of the scriptures and reciting God's names may be good acts in themselves. But if there is no love for God from within, which is the basis of all sadhana (spiritual discipline), any amount of recitation, listening or reading of scriptures are of no use. (Divine Discourse, Feb 5, 1984)
ஸ்ரீமத் பகவத் கீதை,’’ஸ்ரத்தாவான் லபதே ஞானம் ‘’( சிரத்தை உள்ள ஆன்மீக சாதகரே ஞானத்தைப் பெறுகிறார் ) என்கிறது.இதன் பொருள், சிரத்தையும், ஊக்கமும் இன்றி வெற்றி பெற முடியாது என்பதே. சான்றோர்கள் காட்டிய பாதை,சாஸ்திரங்கள் போதிக்கின்ற அறிவு ஆகியவற்றில் நீங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அவற்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். பெரியோர்கள் கூறுவதற்கு நீங்கள் செவி சாய்க்க வேண்டும்.உங்களது உலகியலான திறன்கள் எதுவாக இருந்தாலும்,உங்களுக்கு சிரத்தை இல்லை என்றால், உங்களால் எதையும் சாதிக்க இயலாது. விஞ்ஞான அறிவில் பல வருடங்களிலான வளர்ச்சியும், கணிசமான முன்னேற்றமும் இருந்தாலும் கூட, ஆன்மீக அரங்கில் கடுமையான உழைப்பு இல்லாததால், மனிதர்கள் தெய்வீகத்தை நோக்கி குறிப்பிடத் தக்க முன்னேற்றம் காண முடியவில்லை. ஆன்மீக நூல்களைப் படிப்பதும், இறைவனது நாமங்களை ஜபிப்பதும், நற்காரியங்களே. ஆனால், அனைத்து ஆன்மீக சாதனைகளுக்கும் அடிப்படையான , இறைவன் மீதான உள்ளார்ந்த ப்ரேமை இல்லாவிடில், சாஸ்திரங்களை எவ்வளவு பாராயணமோ, ஸ்ரவணமோ செய்தாலும் அல்லது படித்தாலும், எந்த விதமான பயனும் இல்லை.