azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone must face the consequences of their misdeeds, one day or other, because every action has a reaction, resound and reflection. The awareness of this fact on the part of one and all will bring abundant peace and harmony. Human beings are endowed with endless strength. Your body is indeed a massive generator. Your face is like a television-set, with vivid expressions. But human beings have lost their value in the world today. It is human beings who lend value to a diamond. It is a human being who unearths a raw stone and turns it into a priceless diamond after processing and polishing it. Though people have been able to transform a cheap raw stone into an invaluable diamond, they themselves choose to have no intrinsic value in spite of contributing much to the value-addition of the diamond. - (Divine Discourse, Summer Showers, 1996, Ch 1)
ஒவ்வொருவரும் அவர்களது தவறான செய்கைகளுக்கான விளைவுகளை ஏதோ ஒரு நாளைக்கு எதிர் கொள்ளத் தான் வேண்டும்; ஏனெனில், ஒவ்வொரு வினைக்கும், ஒரு எதிர் வினை, எதிரொலி, மற்றும் பிரதிபலிப்பு உண்டு. அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு வரும் போது, அதுவே சாந்தியையும், இசைவையும், அபரிமிதமாகக் கொண்டு வரும்.மனிதர்கள் முடிவே இல்லாத சக்தி படைத்தவர்கள். உங்களது உடல் உண்மையிலேயே, சக்தியை உருவாக்கும் ஒரு மிகப் பெரிய சாதனமாகும். உங்களது முகம், ஒரு டெலிவிஷனைப் போல, தத்ரூபமான முகபாவங்களை உடையது. ஆனால் மனிதர்கள் இன்று உலகில் தங்களது மதிப்பை இழந்து விட்டார்கள். ஒரு வைரத்திற்கு மதிப்பு அளிப்பவர்கள் மனிதர்களே. ஒரு மனிதனே,ஒரு சாதாரணக் கல்லாக இருக்கும் ஒன்றைத் தோண்டி எடுத்து, அதைப் பதப்படுத்தி, மெருகூட்டி ஒரு விலை மதிப்பற்ற வைரமாக ஆக்குகிறான். மனிதர்களால், ஒரு மலிவான சாதாரணக் கல்லை , விலைமதிப்பற்ற வைரமாக உருமாற்ற முடிந்த போதும், வைரத்திற்கு மதிப்பை பல மடங்கு கூட்டுவதில் பங்கேற்ற போதும் கூட, அவர்கள் தங்களுக்கு மட்டும் உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லாதவாறு இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.