azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Dhritarashtra had a hundred sons, the Kauravas. He knew very well that they were a wicked lot, and also knew that his brother's sons, the Pandavas, were wedded to righteousness (Dharma). He was also aware that the Kauravas were inflicting many indignities and injuries on them. Vyasa warned him thus many times: "Dhritarashtra! I do not say that for you to love your sons is wrong. But you must not shower misplaced affection on your sons. Do not behave like a blind ignorant man. By showing your unrestricted love for a bad son, you are causing harm to the community and the country." The doting father did not heed to sage's advice. Consequently, he got involved in many sinful actions. Through blind infatuation for his sons, what did Dhritarashtra achieve? In the final outcome, he had no one even to perform his funeral obsequies. The Pandavas had to render this service to him. It is not wrong to love children. But parents should learn how to love them. (Divine Discourse, 5 Feb 1984)
த்ருதிராஷ்டிரனுக்கு கௌரவர்கள் என்ற நூறு மக்கள் இருந்தார்கள்.அவர்கள் அனைவரும் தீயவர்கள் என்பதையும், அவனது தம்பியின் புதல்வர்களான பாண்டவர்கள் தர்மத்தைப் பற்றி ஒழுகுபவர்கள் என்பதையும் அவன் அறிவான். கௌரவர்கள் , அவர்கள் மீது பல அவமானங்களையும், துன்பங்களையும் சுமத்துகிறார்கள் என்பதையும் கூட அவன் அறிந்திருந்தான்.வியாஸ முனிவர் அவனை பல முறை, ‘’ த்ருதிராஷ்டிரா! நீ உன் பிள்ளைகள் மீது அன்பு காட்டுவதைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், நீ தவறான பரிவைப் பொழியக் கூடாது.கண்மூடித்தனமான அறிவற்ற மனிதனைப் போல நடந்து கொள்ளாதே. ஒரு கெட்ட மைந்தன் மீது கட்டுப் பாடற்ற அன்பைக் காட்டுவதன் மூலம், நீ இந்த சமூகத்திற்கும், நாட்டிற்கும் தீங்கை விளைவிக்கிறாய்.’’ என எச்சரித்தார். செல்லம் கொடுக்கும் அந்தத் தந்தை முனிவரின் அறிவுரைக்குச் செவி சாய்க்கவில்லை. அதன் பலனாக, அவன் பாவகரமான பல செயல்களில் ஈடுபட நேர்ந்தது. தனது பிள்ளைகள் மீது கொண்ட கண்மூடித்தனமான மோகத்தினால், த்ருதிராஷ்டிரன் கண்ட பலன் என்ன? இறுதியில், அவனது அந்திமக் கிரியையைச் செய்வதற்கு ஒருவர் கூட மிஞ்சவில்லை. பாண்டவர்கள் அவனுக்கு இந்த சேவையைச் செய்ய நேர்ந்தது. குழந்தைகள் மீது அன்பு காட்டுவது தவறல்ல. ஆனால், பெற்றோர்கள் அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.