azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

When you become conscious of the light, acquire wisdom and realise the meaning of existence, you will be transported from agony to ecstasy. Light here does not signify the light of the Sun, the Moon or the lamp, but that of the heart. Wisdom does not refer to scientific wisdom, but enlightenment brought about by the transformation of the heart. What about existence? Awareness of your own true reality is the proper meaning of existence. The awareness of your reality lies in the realisation that you are not the body, the mind or the senses. True realisation lies in understanding the fact that you are based on a transcendental principle that goes beyond the boundaries of matter. One should earnestly investigate the presence of Divinity in human life. Awareness of one’s own duty is tantamount to the awareness of Divinity in human life. (Summer Showers Ch1, May 20, 1996.)
எப்போது, நீங்கள் ஜோதியை உணர்ந்து, ஞானத்தைப் பெற்று, வாழ்வதன் அர்த்தத்தை உணருகிறீர்களோ, அப்போதே நீங்கள் வேதனையிலிருந்து, ஆனந்தப் பரவச நிலைக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள். இங்கு ஜோதி என்றால், சூரிய அல்லது சந்திர அல்லது விளக்கின் ஒளி என்ற பொருள் அல்ல; ஆனால் இதய ஜோதி என்பதாகும். ஞானம் என்றால் விஞ்ஞான அறிவு என்பதைக் குறிப்பிடவில்லை ;ஆனால் மன மாற்றத்தால் ஏற்படும் ஆன்மீக ஞானத்தைக் குறிப்பிடுகிறது. வாழ்வது என்றால் என்ன? உங்களது உண்மை நிலையைப் பற்றிய விழிப்புணர்வே, வாழ்வது என்பதன் சரியான பொருளாகும். நீங்கள் இந்த உடலோ,மனமோ அல்லது புலன்களோ இல்லை எனப் புரிந்து கொள்வதில் தான் உங்களது உண்மை நிலையைப் பற்றிய விழிப்புணர்வு உள்ளது. பொருட்களின் பரிமாணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு கோட்பாட்டின் ஆதாரத்திலேயே நீங்கள் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்வதில் தான் உண்மையான ஆத்ம சாக்ஷாத்காரம் உள்ளது. மனித வாழ்க்கையில் தெய்வீகம் இருப்பதை ஒருவர் உளமாற ஆராய வேண்டும்.ஒருவர் தனது கடமை எது என்பதைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவது, மனித வாழ்வில் தெய்வீகம் உள்ளது என்பதைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கு ஒப்பாகும்.