azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
There are no limitations of time or space for the establishment of oneself in the contemplation of the Omnipresent Lord. For this, there is nothing like a holy place or a special time. Wherever the mind revels in contemplation of the Divine that is the holy place! Whenever it does so, that is the auspicious moment! Then and there, one must meditate on the Lord. Hence scriptures reveal, ‘To meditate on God, there is no fixed time or place. When and where the mind so desires, then and there is the time and place!’ (Na kaala niyamo yathra, na deshasya sthalasya cha Yathrasya ramathe chittham, thathra dhyanena kevalam.) The world can achieve prosperity through disciplined souls whose hearts are pure and who represent the salt of the earth. To promote the welfare of the world, from this very minute, everyone should pray for the advent of such holy personages, and deserve the blessings of the great, and forget the sufferings of your daily living. (Prema Vahini, Ch 73.)
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள இறைவனைத் தியானிப்பதில் ஒருவர் தன்னை ஆழ்த்திக் கொள்வதற்கு , கால,தேச பரிமாணங்கள் எதுவுமில்லை. இதற்கு புனிதமான இடம் என்றோ அல்லது பிரத்யேகமான காலம் என்றோ கிடையாது. எங்கெல்லாம் மனம் இறை தியானத்தில் திளைத்திருக்கிறதோ அதுவே புண்யஸ்தலம் ! எப்போது அது அவ்வாறு ஈடுபடுகிறதோ அதுவே மங்களகரமான நேரம் !அங்கே , அப்போதே ஒருவர் இறைவனை தியானிக்க வேண்டும். எனவே தான் மறை நூல்கள், ‘’இறைவனை தியானிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட காலமோ, தேசமோ இல்லை. எங்கு, எப்போது மனம் அவ்வாறு விரும்புகிறதோ, அதுவே, அப்போதே அந்த தேசமும் காலமும் ஆகும் ! ( ந காலா நியமோ யத்ர,ந தேசஸ்ய ஸ்தலஸ்ய ச, யத்ரஸ்ய ரமதே சித்தம் தத்ர த்யானேன கேவலம்)’’ என்று விளக்கம் அளிக்கின்றன. தூய இதயமும், இந்த பூமியின் சாரம் போன்றவர்களுமான, கட்டுப்பாடுள்ள ஆத்மாக்களின் மூலம், இந்த உலகம் வளம் பெற முடியும். இந்த உலக க்ஷேமத்தைப் பேணுவதற்கு, இந்தத் தருணத்திலிருந்தே, ஒவ்வொருவரும், இப்படிப் பட்ட புனிதமான ஆன்றோர்கள் தோன்றவேண்டும் எனப் பிரார்த்தித்து, அத்தகைய ஆன்றோரின் ஆசிகளுக்குத் தகுந்தவராகி,உங்களது அன்றாட வாழ்க்கையின் துன்பங்களை மறக்க வேண்டும்.