azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
In the world the progeny of Dharma and Adharma (Righteousness and Unrighteousness) are continually growing. Consider this lineage: Unrighteousness (Adharma) married delusion (Mithya). Mithya is neither truth nor untruth. This couple had two children, a son called Ahamkara (egoism) and a daughter called Moha (infatuation). As both are the children of Ignorance, with no capacity to judge what is right and wrong, the unholy alliance between them resulted in the birth of Lobha (avarice) and Vanchana (deceit) as son and daughter. From the wrongful union of these two, Irshya (jealousy) and Krodha (anger) were born. Out of their union, Bheeti (fear) and Mrityu (death) were born. This lineage is known as Adharma Santhathi (the progeny of unrighteousness). Following this lineage of Unrighteousness, every union is improper. (Divine Discourse, 19 Jan 1984)
இந்த உலகில், தர்மம் மற்றும் அதர்மத்தின் வாரிசுகள் தொடர்ந்து பெருகிக் கொண்டே போகின்றனர். இந்த சந்ததியைக் கவனியுங்கள் ; அதர்மம் மித்யா என்ற மாயையைத் திருமணம் செய்து கொண்டுள்ளது. மித்யா என்பது உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல.இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள், ஒரு மகன் அஹங்காரம், ஒரு மகள் மோஹம். அறியாமையின் குழந்தைகளான இந்த இருவருக்கும், நல்லது எது கெட்டது எது என்பதைப் பகுத்தறியும் ஆற்றல் இல்லாததால், அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட புனிதமற்ற உறவு, பேராசை ( லோபம்) என்ற மகன் மற்றும் வஞ்சகம்( வாஞ்சன ) என்ற மகளின் பிறப்பில் முடிந்தன. இந்த இருவர்களின் தவறான உறவினால், பொறாமையும்( ஈர்ஷ்யா), க்ரோதமும் ( கோபம் ) பிறந்தனர். அவர்களது இணைப்பால்,பீதி ( பயம்) மற்றும் மரணம் ( ம்ருத்யு) ஆகியோர் பிறந்தனர். இந்த சந்ததியே, அதர்ம சந்ததி என அழைக்கப் படுகிறது. இந்த அதர்ம சந்ததியைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு உறவும் முறையற்றவையே.