azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love, consider for a moment, where from the rain comes. It comes from the clouds. Clouds come from water vapour, rising from the sea. Rain water becomes a channel on the earth, changes itself into a rivulet and merges into a big river, and finally reaches the sea as its destination. A pot made out of clay when broken, is cast on the ground, and in course of time, becomes clay again. Water from the sea joins the sea, clay from the earth, goes back to earth again, but why does a human being alone forget the source He came from? The only besetting evil in human being is the sense of ‘mine’ (Mamakara), the acquisitive and possessive feeling. This is the root-cause for all other evils. You must remember that you are truly divine. You inhale and exhale 21,600 times – it is a natural reminder of the message of ‘SO-HAM’ (I am God) which is the truth about your divine reality. (Divine Discourse, 6-Mar-1989)
அன்பின் திருவுருங்களே! மழை எங்கிருந்து வருகிறது என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அது மேகங்களிலிருந்து வருகிறது. கடலிலிருந்து எழும் நீராவியிலிருந்து மேகங்கள் வருகின்றன.மழை நீர் பூமியில் ஒரு கால்வாயாக ஆகி, நீரோடையாக மாறி, பெரிய நதியில் கலந்து, இறுதியில் தனது இறுதி முடிவாகக் கடலை சென்றடைகிறது.களிமண்ணால் ஆன ஒரு பானை உடைந்து பூமியில் விழுந்த பின், காலப் போக்கில், மறுபடியும் களி மண்ணாகி விடுகிறது. கடலிலிருந்து வந்த நீர் கடலுடன் சங்கமமாகிறது,பூமியிலிருந்து வந்த களிமண், பூமிக்கே சென்றடைகிறது;ஆனால் மனிதன் மட்டும் தான் எந்த மூலாதாரத்திலிருந்து வந்தான் என்பதை,ஏன் மறந்து விடுகிறான்? பேராசையும், சொந்தம் கொண்டாடும் உணர்வும் ஆன ‘’தனது’’ ( மமகார) என்பதே மனிதனில் உள்ள நிலைகுலையச் செய்யும் ஒரே தீய குணமாகும். இதுவே மற்றைய அனைத்துத் தீய குணங்களுக்கும் ஆணி வேராகும். நீங்கள் உண்மையிலேயே தெய்வீகமானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ,21,600 முறை நீங்கள் மூச்சை உள் இழுத்து ,பின் வெளி விட்டுச் சுவாசிக்கிறீர்கள்—இதுவே, உங்களது உண்மையான தெய்வீக சத்தியமான ‘’ஸோ-ஹம்‘’ (நானே கடவுள்) என்ற செய்தியை, இயல்பாகவே நினைவுறுத்திக் கொண்டு இருக்கிறது.