azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Who is Lord Shiva, and where is He to be found? Many answers are given, including Kailash as His place of residence. The true answer is, ‘Isavasyam Idam Sarvam’ (All this is pervaded by Isa). He is omnipresent. There is no place, object or being where God is not present. Correct your outlook and recognise this unity in the apparent diversity around you. When God is omnipresent, what need is there to go in search of Him? The search is meaningless. If one gets rid of attachment and hatred, one will experience the Divinity inherent within. This is the sadhana (spiritual exercise) one has to do today - to get rid of desire and hatred which conceal the God within. Many people ask: \"Swami! Show us the way.\" All you have to do is to go back to the source from which you came. Where is the need for seeking the way? The Bhagavatha has declared that it is the natural destiny of every living being to go back to where each one came from. (Divine Discourse, 6 March 1989)
சிவபெருமான் யார்,அவரை எங்கு காண முடியும்? அவரது வாசஸ்தலம் கைலாயம் என்பதையும் சேர்த்து பல பதில்கள் அளிக்கப் பட்டுள்ளன. ‘’ ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம் ‘’(இந்த அனைத்திலும் ஈசனே வியாபித்துள்ளான்) என்பதே சரியான பதில்,. அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். இறைவன் இல்லாத இடமோ, பொருளோ அல்லது ஜீவராசியோ கிடையாது. உங்களது திருஷ்ட்டியைச் சரி செய்து கொண்டு, உங்களைச் சுற்றிக் காணப்படும் வேற்றுமைகளில் இந்த ஒற்றுமையைக் உணருங்கள். இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் போது, அவனைத் தேடி அலைய வேண்டிய அவசியம் என்ன?இந்தத் தேடுதல் அர்த்தமற்றது. ஒருவர் பற்றுதலையும், த்வேஷத்தையும் விட்டு விட்டால், தங்குள்ளேயே உறையும் தெய்வீகத்தை அனுபவிப்பார். உள்ளுறையும் தெய்வீகத்தை மறைக்கும் விருப்பு, வெறுப்புக்களை விட்டொழிப்பதே இன்று ஒருவர் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக சாதனையாகும். பல மனிதர்கள், ‘’ ஸ்வாமி ! எங்களுக்கு வழி காட்டுங்கள். ’’ எனக் கேட்கிறார்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் எந்த மூலாதாரத்திலிருந்து வந்தீர்களோ, அங்கு திரும்பி செல்வதே.வழியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் என்ன? ஸ்ரீமத் பாகவதம்,ஒவ்வொரு ஜீவராசியின் இயல்பான குறிக்கோள்,அவை ஒவ்வொன்றும் எங்கிருந்து வந்ததோ , அங்கு திரும்பிச் செல்வது தான் என்று பறைசாற்றுகிறது.