azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Kind-hearted doctors run medical institutions here and there, serve the diseased and cure the afflicted. Similarly if we had ashrams here and there of holy personages who were experts in the treatment and cure of the ‘birth-and-death disease’, then people could be cured of the afflictions of ignorance, untruth, immorality, and self-aggrandisement. Ignorance produces wickedness, and it can be cured only by the medicine of the knowledge of Brahman (Brahma-jnana), with supplementary doses of the drugs like peacefulness, fortitude, self-control (santhi, sama, dama), etc. Instead, the ‘great men’ of today, for the sake of name and fame, give those who approach them the medicines they demand and the drugs their patients relish! The so-called ‘great’, on account of their weakness and foolishness, fall into perdition even before they taste the spiritual bliss themselves! The holy essence has to be experienced and realised. One’s selfish needs have to be sacrificed.(Prema Vahini, Ch 68.)
கனிவான இதயம் படைத்த மருத்துவர்கள் இங்கும், அங்கும், மருத்துவ நிலயங்களை நடத்தி, வியாதியஸ்தர்களுக்கும், நோய் வாய்ப் பட்டவர்களுக்கும் சேவை புரிகின்றனர்.அதே போல , பவரோகம்( பிறப்பு- இறப்பு எனும் சூழல்) எனும் வியாதிக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருக்கும் புனிதமானவர்களுடைய ஆஸ்ரமங்கள் இங்கும், அங்கும் இருக்குமானால், மனிதர்கள், அறியாமை, அசத்தியம்,ஒழுக்கக்கேடு மற்றும் தற்பெருமை என்ற வியாதிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும். அறியாமை, துர்க்குணத்தை உருவாக்குகிறது; இதை ப்ரம்மஞானம் என்ற மருந்துடன் சாந்தி, மனவலிமை,புலனடக்கம் (சாந்தி, சமா,தமா) என்பவற்றையும் சேர்த்து அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால், இன்றைய,’’ பெரிய மனிதர்கள் ‘’ பெயர் மற்றும் புகழுக்காக, அவர்களை அணுகுபவர்களுக்கு, அவர்கள் கேட்கும் மருந்துகளையும் மற்றும் நோயாளிகள் விரும்பும் நிவாரணிகளையும் மட்டுமே அளிக்கிறார்கள் ! ‘’ பெரிய மனிதர்கள் ‘’ எனப்படுபவர்கள், அவர்களது பலஹீனம் மற்றும் முட்டாள்தனத்தினால், தாங்கள் ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு முன்பே, அழிவில் வீழ்ந்து விடுகிறார்கள் ! புனிதத்துவத்தின் சாரத்தை அனுபவித்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தனது சுயநலமான தேவைகளைத் தியாகம் செய்தாக வேண்டும்.