azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Irrespective of whatever inconveniences you may encounter, you must continue your spiritual practices with the same discipline. The smarana (remembrance) of the Name of the Lord you cherish should go on. Your chosen Name must not give you the slightest feeling of dislike or apathy. If the Name is changed frequently, concentration is impossible, and your mind will not attain one-pointedness, which is the goal of all spiritual disciplines. Avoid constant adoption and rejection of Lord’s Names. Be convinced that all Names and Forms are the same name and form that you adore. Take all worldly losses, sufferings, and worries as merely temporal and transitory, and realise that repetition of the Name and meditation is only to overcome such grief. You must understand that loss, suffering, and worry are external, they belong to this world, while repetition of the Name and meditation are internal, they belong to the realm of the love for the Lord. (Prema Vahini, Ch 64)
நீங்கள் எப்படிப் பட்ட அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டி வந்தாலும், நீங்கள், உங்களது ஆன்மீக சாதனைகளை அதே கட்டுப் பாட்டுடன் தொடர வேண்டும். நீங்கள் போற்றும் இறை நாமஸ்மரணை தொடர்ந்து நடக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இறைவனது நாமம், ஒரு சிறிதளவு கூட வெறுப்பு அல்லது அலட்சிய உணர்வை, உங்களுக்குத் தரக் கூடாது.நீங்கள் இறை நாமத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால், மனக்குவிப்பு இயலாததாகி விடும்; உங்கள் மனம்,அனைத்து ஆன்மீக சாதனைகளின் குறிக்கோளான ஒருமுகத் தன்மையைப் பெற முடியாது.இடையறாது, இறை நாமங்களை ஏற்பது மற்றும் விட்டு விடுவதைத் தவிர்த்து விடுங்கள்.அனைத்து இறை நாம, ரூபங்களும், நீங்கள் போற்றும் இறைநாம, ரூபமும் ஒன்றே என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலகியலான நஷ்டங்கள்,துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தும்,தாற்காலிகமானவை மற்றும் கலைந்து விடக்கூடியவை என ஏற்றுக் கொண்டு, இறைநாமஸ்மரணை மற்றும் தியானம் மட்டுமே இப்படிப் பட்ட துயரத்தை வெல்லமுடியும் என்பதை உணருங்கள். நஷ்டம்,துன்பம் மற்றும் கவலை ஆகியவை வெளிப்புறமானவை மற்றும் உலகியலானவை; அதே சமயம் இறை நாமஸ்மரணை மற்றும் தியானம் உள்ளார்ந்தவை, இறை அன்பு சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.