azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Above all, it is best that the Sadhaka under all circumstances should be joyful, smiling and enthusiastic. Even more than Bhakthi and Jnana (Devotion and Wisdom), this pure attitude is desirable. Those who have acquired it deserve to reach the goal first. This quality of joy at all times is the fruit of the good done in past births. When a person is ever worried, depressed and doubting, he can never attain bliss, whatever spiritual practices or Sadhana one may undertake. The first task of a spiritual aspirant is the cultivation of enthusiasm. Through that enthusiasm, he can derive any variety of Ananda. Never get inflated when you are praised; never get deflated when you are blamed. Be a spiritual lion, regardless of both. One must analyse and correct one\'s faults on his own; this is most important. (Prema Vahini, Ch 63)
அனைத்திற்கும் மேலாக, ஆன்மீக சாதகன், எல்லா சந்தர்ப்பங்களிலும், ஆனந்தமாகவும், புன்முறுவலுடனும், உற்சாகமாகவும் இருத்தல் சாலச் சிறந்ததாகும். பக்தியையும், ஞானத்தையும் விடவே, இப்படிப் பட்ட தூய மனப்பாங்கு விரும்பத் தக்கதாகும்.இதைப் பெற்றவர்கள், வாழ்வின் இலக்கை முதலில் எட்டத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.எல்லாக் காலங்களிலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்தத் தன்மை முந்தைய பிறவிகளில் ஆற்றிய நற்செயல்களின் பலனாகும். எப்போதும் கவலையுடனும், மனச்சோர்வுடனும், சந்தேகப் பட்டுக் கொண்டும் இருக்கும் ஒருவர், எப்படிப் பட்ட ஆன்மீக சாதனைகளை செய்து கொண்டு இருந்தாலும், ஒருபோதும் ஆனந்தம் அடைய மாட்டார். ஆன்மீக சாதகனின் முதல் பணி உற்சாகத்தை வளர்த்துக் கொள்வதே. அந்த உற்சாகத்தின் மூலம், எந்த விதமான ஆனந்தத்தையும் அவர் பெற முடியும். நீங்கள் ஒருபோதும் ,போற்றப் படும்போது பூரிக்கவும் வேண்டாம்,தூற்றப் படும்போது, துவண்டு விடவும் வேண்டாம்.இரண்டும் எப்படி இருந்தாலும், ஆன்மீகச் சிங்கங்களாகத் திகழுங்கள்.ஒருவர் தனது குறைகளை ஆராய்ந்து, திருத்திக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும்.