azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
In this vast world, every living being desires happiness that is eternal. Where can we attain this happiness from? Beauty is happiness, and happiness is the nectarous essence of life. Which objects are beautiful in this world? A number of objects attract people in various ways. You think it is the beauty of the objects that attracts. But beauty is temporary, whether it is in human beings, birds, animals, or things. For example, this is a rose. It looks so beautiful. Its beauty gives happiness. But how long will its beauty last? It may be there till today or tomorrow. Thereafter all its petals will fall down and it will lose its shine. When it loses its beauty, it will no longer give you happiness. Thus in this world, you cannot find permanent beauty and permanent happiness. Only God is permanent in this world; the rest is temporary like passing clouds. Everlasting happiness can be attained only from God. (Divine Discourse, 22 July 1996)
இந்தப் பரந்த உலகில்,ஒவ்வொரு ஜீவராசியும், நிரந்தரமான சந்தோஷத்தை விரும்புகின்றன.இந்த சந்தோஷத்தை நாம் எங்கிருந்து பெற முடியும் ? சுந்தரமே ஆனந்தம், ஆனந்தமே வாழ்க்கையின் அம்ருத மயமான சாரம்.இந்த உலகில் சுந்தரமான பொருட்கள் எவை? பல பொருட்கள், பல விதங்களில் மனிதர்கள் ஈர்க்கின்றன. பொருட்களின் அழகு தான் ஈர்க்கின்றன என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், மனிதர்களோ,பறவைகளோ,மிருகங்களோ அல்லது பொருட்களோ, அவற்றின் அழகு தாற்காலிகமானது.உதாரணத்திற்கு இது ஒரு ரோஜாப்பூ. அது மிகவும் அழகாகத் தோன்றுகிறது.அதன் அழகு சந்தோஷத்தை அளிக்கிறது. ஆனால் இந்த அழகு எவ்வளவு காலம் நீடிக்கும்? அது இன்று வரையோ அல்லது நாளை வரையோ இருக்கலாம். அதன் பிறகு அதன் இதழ்கள் அனைத்தும் உதிர்ந்து அது அதனது பளபளப்பை இழந்து விடும். அது தனது அழகை இழந்து விட்டால், அதற்கு மேல் அது உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்காது. எனவே, இந்த உலகில் நீங்கள் நிரந்தரமான சுந்தரத்தையோ அல்லது சந்தோஷத்தையோ காண முடியாது.இறைவன் ஒருவன் மட்டுமே இந்த உலகில் நிரந்தரமானவன்; மற்றவை அனைத்தும் கலையும் மேகங்களைப் போன்றவை. என்றும் நிலைக்கும் ஆனந்தத்தை, இறைவனிடமிருந்து மட்டுமே பெற முடியும்.