azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Young age is like a delicious fruit. You should offer this sweet and delicious fruit to God. It is not possible to begin worshipping God after retirement in old age, when your body becomes weak, the sense organs lose their power, and the mind becomes feeble. Start early, drive slowly and reach safely. Start praying to God right from an early age. If you do not undertake sacred actions when your physical and mental faculties are strong, then when will you perform them? What can you do when the sense organs have lost all their power? Hence practice offering the fragrant flowers of your mind and heart to God with total faith from a young age. This is true naivedyam (food offering). Many people today do not make such offerings. When their senses become weak after indulging in all sorts of sensual pleasures, they think of offering them to God, akin to offering leftover food. (Divine Discourse 16-Jul-1996)
இளம் வயது என்பது ஒரு சுவையான கனியைப் போன்றது. இந்த இனிமையான மற்றும் சுவையான கனியை நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற பின்னர்,உங்கள் உடல் தளர்ந்து,புலன்கள் பலமிழந்து, மனம் பலஹீனமான நிலையில் இருக்கும் போது, இறைவனை வழிபட ஆரம்பிப்பது என்பது இயலாத காரியமே. முன்னரே தொடங்கி, மெதுவாகப் பயணித்து, பத்திரமாகச் சென்றடையுங்கள். சிறு வயதிலிருந்தே இறைவனை வழிபடத் தொடங்குங்கள். உங்களது உடல் மற்றும் மனத்திறன்கள் வலுவாக இருக்கும் போதே, புனிதமான செயல்களை ஆற்றாவிடில், எப்போது அவற்றை ஆற்றப் போகிறீர்கள்? புலன்கள் அவற்றின் அனைத்து வலுவையும் இழந்த பிறகு உங்களால் என்ன செய்ய முடியும்? எனவே, உங்களது மனம் மற்றும் இதயம் என்ற நறுமண மலர்களை, சிறு வயதிலிருந்தே, முழு நம்பிக்கையுடன் இறைவனுக்கு அர்ப்பணிப்பதைப் பழகிக் கொள்ளுங்கள். இதுவே உண்மையான நைவேத்யம் ஆகும். பலர் இன்று, இப்படிப் பட்ட அர்ப்பணிப்புகளைச் செய்வதே இல்லை. அனைத்து விதமான புலனின்பங்களில் ஈடுபட்ட பின், எப்போது அவர்களது புலன்கள் வலுவிழந்து இருக்கின்றனவோ, அப்போது அவர்கள் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறார்கள்; இது மீந்து போன எச்சில் உணவை அர்ப்பணிப்பதற்கு ஒப்பாகும்.