azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Many aspirants lack moral commitment and seek God for the fulfilment of their petty desires and transient benefits. No one seeks to understand the nature of true love or the Divinity that underlies everything. What we witness today in the world, is a great deal of play-acting. All appear as devotees and all proclaim their spirit of sacrifice. Everyone declares himself or herself as a sadhaka (spiritual aspirant). Every believer claims that they are connecting with God. Sincerely enquire within, “Is the aspirant (Sadhaka) serving God or is God serving the Sadhaka?” The service that the sadhaka is doing is trivial. Offering to God what God has provided is like offering to the Ganga water from the Ganga. The truth is it is God who is serving the devotee. All the capacities given by God should be used in the service of the Divine. There is no need to go in quest of God. God is all the time searching for the genuine and steadfast devotee. (Divine Discourse 13 Jan 1984)
பல ஆன்மீக சாதகர்கள் ஒழுக்க ரீதியான அர்ப்பணிப்பு உணர்வு இன்றி, தங்களது அற்ப ஆசைகளையும், நிலையற்ற பலன்களையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக இறைவனை நாடுகிறார்கள்.எவரும் உண்மையான ப்ரேமையின் தன்மையையும், அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் தெய்வீகத்தையும் புரிந்து கொள்ள முயலுவதில்லை.நாம் இந்த உலகில் இன்று பார்ப்பதெல்லாம் வெறும் நாடகமே.அனைவரும் பக்தர்களைப் போலக் காட்டிக்கொண்டு, அவர்களது தியாக மனப்பாங்கினை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஆணோ அல்லது பெண்ணோ தங்களை ஆன்மீக சாதகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பக்தரும் அவர்கள் இறைவனோடு சம்பந்தம் கொண்டிருப்பதாக பெருமை அடித்துக் கொள்கிறார்கள். உளமாற உங்களையே,’’ ஆன்மீக சாதகர் இறைவனுக்கு சேவை செய்கிறாரா அல்லது இறைவன் சாதகனுக்கு சேவை செய்கிறானா? ‘’ என்று கேட்டுக் கொள்ளுங்கள். சாதகன் ஆற்றும் சேவை மிகவும் அற்பமானதே. இறைவன் அளித்ததையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது, கங்கை நீரை எடுத்து, கங்கை நதியிலேயே அர்க்யம் விடுவதைப் போலாகும். உண்மை என்ன எனில் இறைவனே பக்தனுக்குச் சேவை ஆற்றுகிறான்.இறைவன் அளித்துள்ள அனைத்து ஆற்றல்களையும் இறைவனது சேவையிலேயே பயன் படுத்த வேண்டும். இறைவனைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறைவனே, உண்மையான மற்றும் உறுதியான மனம் படைத்த பக்தனை எப்போதும் தேடிக் கொண்டு இருக்கிறான்.