azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Good and bad, wealth and poverty, praise and blame go together in this world. You cannot derive happiness out of happiness (Na sukhat labhate sukham). Happiness comes only out of sorrow. A wealthy man today may become a pauper tomorrow. Similarly, a pauper may become a rich man some day or other. Today you are being praised, but tomorrow you may be criticised. To consider praise and blame, happiness and sorrow, prosperity and adversity with equal-mindedness is the hallmark of a true human being. The Gita declares, “Remain equal-minded in happiness and sorrow, gain and loss, victory and defeat (Sukha Dukhe same kritva labhalabhau jayajayau). You can truly enjoy your life as a human being only when you consider both sorrow and happiness, profit and loss with equanimity. There is no value for happiness without sorrow. Therefore, welcome sorrow if you want to experience real happiness. (Divine Discourse, 09 Jul 1996.)
நல்லவை, கெட்டவை,வளமை, ஏழ்மை,புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவை இந்த உலகில் ஒன்று சேர்ந்தே செல்கின்றன. நீங்கள் இன்பத்திலிருந்து, இன்பத்தைப் பெறவே முடியாது ( ந சுகாத் லபதே சுகம்). சுகம் என்பது துக்கத்திலிருந்து மட்டுமே வருகிறது. செல்வந்தனாக இன்று இருக்கும் ஒருவன் நாளை ஒரு ஏழையாக ஆகக் கூடும். அதைப் போலவே, ஏழையாக இருக்கும் ஒருவன் என்றைக்காவது பணக்காரனாக ஆகக் கூடும்.இன்று நீங்கள் போற்றப்படுகிறீர்கள், ஆனால் நாளை நீங்கள் தூற்றப் படக் கூடும். புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சி,இன்பம் மற்றும் துன்பம், வளமை மற்றும் வறுமை ஆகியவற்றை சமச்சீரான மன நிலையோடு கருதுவதே ஒரு உண்மையான மனிதனின் அடையாளச் சின்னமாகும். ஸ்ரீமத் பகவத் கீதை, ‘’இன்பம் மற்றும் துன்பம்,லாபம் மற்றும் நஷ்டம்,வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றில் ஒரே மாதிரியான மனநிலையோடு இருங்கள் ( சுக துக்க ஸமே க்ருத்வா லாப அலாபோ ஜயாஅஜயோ ) ‘’ என அறிவுறுத்துகிறது. இன்ப,துன்பங்களையும், லாப, நஷ்டங்களையும் சமச்சீரான மனநிலையோடு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள் ஒரு மனிதனாக உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். துன்பம் இன்றி, இன்பத்திற்கு மதிப்பே கிடையாது. எனவே, உண்மையான சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், துன்பத்திற்கு வரவேற்பு அளியுங்கள்.