azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Education and other things that make one grow and become big are of no use for spiritual progress; they bring about only spiritual downfall. That is why the world is called the ‘illusory universe’ (maya-prapancha). Truth, in whatever illusion it is immersed, will only shine more effulgently, for such is the nature of truth. How can we say that the objective world, which undergoes modifications every minute, waning and waxing with the waywardness of appearing and disappearing, is eternal truth? The characteristic of a spiritual aspirant is the attainment of Truth, not the search of the unreal in this evanescent world. In this false world, there can be no true living (satya-achara). There can be only false living (mithya-achara). True living consists in the realisation of the Lord. This must be borne in mind by everyone every moment of one’s life. (Prema Vahini, Ch 58)
ஒருவர் வளர்ந்து, பெரிய மனிதராக ஆகுமாறு செய்யும் கல்வி மற்றும் இதர விஷயங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு பயனுள்ளவையாக இருப்பதில்லை; அவை ஆன்மீக வீழ்ச்சியைத் தான் கொண்டு வருகின்றன.அதனால் தான் இந்த உலகம், ‘’ மாய பிரபஞ்சம் ‘’எனப்படுகிறது. எப்படிப் பட்ட மாயையில் மூழ்கடிக்கப் பட்டிருந்தாலும் சத்யம் மேலும் கொழுந்து விட்டுப் பிரகாசிக்கும்; ஏனெனில் அதுதான் சத்தியத்தின் தன்மை.தோன்றியும், மறைந்தும், வளர்ந்தும், தேய்ந்தும், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும் பொருட்களாலான இந்த உலகத்தை நித்ய சத்தியம் என்று நாம் எவ்வாறு கூற முடியும்?ஒரு ஆன்மீக சாதகனது அறிகுறி சத்தியத்தை அடைவதே அன்றி, நிலையற்ற இந்த உலகில் அசத்தியத்தைத் தேடுவதல்ல.பொய்மையான இந்த உலகில் உண்மையான வாழ்க்கை (சத்ய-ஆசார) என்பதே இல்லை.வெறும் பொய்மையான வாழ்க்கையே ( மித்ய-ஆசார) இருக்க முடியும். உண்மையான வாழ்க்கை என்பது இறைவனை அறிவதே ஆகும். இதை ஒவ்வொருவரும், தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், கருத்தில் கொள்ள வேண்டும்.