azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! The hallmark of love is selfless sacrifice (thyaga). Love seeks nothing from anyone. It bears no ill-will towards anyone. It is utterly selfless and pure. Failing to understand the true nature of love, people yearn for it in various ways. Love must be cherished with feelings of selflessness and sacrifice. In what is deemed as love in the world - whether it be maternal love, brotherly love, or friendship - there is an element of selfishness. Only God\'s love is totally free from the taint of selfishness. Divine love reaches out even to the remotest being. It brings together those who are separate. It raises man from animality to Divinity. It transforms gradually all forms of worldly love to Divine love. Even the feeling of universal brotherliness is not the same as the experience of ekatvam (oneness). Even in such a fraternal feeling there is an element of self-interest. Those who really wish to promote universal brotherhood too should develop the consciousness of the one Spirit dwelling in all beings. (Divine Discourse, 20 June 1996)
ப்ரேமையின் ஸ்வரூபங்களே! ப்ரேமையின் தலை சிறந்த அடையாளச் சின்னம் தியாகமே.ப்ரேமை எவரிடமிருந்தும் எதையும் வேண்டுவதில்லை. அது எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்வதில்லை.அது முழுவதும் தன்னலமற்றதும், தூய்மையானதும் ஆகும்.ப்ரேமையின் உண்மையான தன்மையை புரிந்து கொள்ளாமல், மனிதர்கள் அதற்காக பல்வேறு வழிகளில் ஏங்குகிறார்கள். ப்ரேமையை தன்னலமின்றியும், தியாக உணர்வோடும் போற்றிக் காக்க வேண்டும். உலகில் இன்று அன்பு எனக் கருதப்படுவது – அது தாயன்பானாலும், சகோதர அன்பானாலும், நட்பு அன்பானாலும் – அதில் ஓரளவு சுயநலம் இருக்கத் தான் செய்கிறது. இறைவனது ப்ரேமை ஒன்றே சுயநலத்தின் சுவடு முற்றிலும் இல்லாத ஒன்றாகும்.தெய்வீக ப்ரேமை வெகு தொலைவில் உள்ளவற்றைக் கூட சென்றடைகிறது.பிரிந்து உள்ளவர்களை அது ஒன்று சேர்க்கிறது. அது மனிதனை மிருகத்தவத்திலிருந்து ,தெய்வீகத்திற்கு உயர்த்துகிறது. அது படிப்படியாக அனைத்து உலகியலான அன்பையும் தெய்வீக ப்ரேமையாக மாற்றி விடுகிறது.பிரபஞ்சமயமான சகோதரத்துவ உணர்வு கூட, ஏகத்துவத்தின் அனுபவத்தை ஒத்ததல்ல.இப்படிப் பட்ட சகோதரத்துவ உணர்வில் கூட ஓரளவு சுய நலம் இருக்கிறது.பிரபஞ்சமயமான சகோதரத்துவ உணர்வை பேணிக்காக்க விரும்புகிறவர்கள் கூட, அனைத்து ஜீவராசிகளிலும் உறைவது ஒரே ஆத்மாதான் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.