azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 31 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 31 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Really speaking, this world has to serve only the purpose of sustaining the body. Those aspiring for liberation have to subdue the senses. “Food for guarding the body, dress to ward off the cold,” states the Uttara Gita (the Gita Krishna imparts to Arjuna after the Kurukshetra war). However, if one gets immersed in these pursuits, one forgets the purpose for which one has come and the goal of all activity and holy endeavour. Instead whatever activity a person may be engaged in, the person must, as automatically as breathing, be contemplating on and always aware of this: “I am born to serve God and to realize my true self.” All acts — wearing, eating, walking, studying, serving, moving — should be performed in the belief that they take one into the Presence of the Lord. Every act must be done in a spirit of dedication to the Lord. (Prema Vahini, Ch 55)
உண்மையைக் கூறப்போனால், இந்த உலகம், உடலைப் பேணிக்காக்கும் பணிக்காக மட்டுமே செயலாற்ற வேண்டும். மோக்ஷம் கிட்டவேண்டும் என்று விழைபவர்கள், தங்களது புலன்களை அடக்கி ஆள வேண்டும்.உத்தர கீதை,( குருக்ஷேத்திரப் போருக்குப் பின் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால், அர்ஜூனனுக்கு உபதேசிக்கப்பட்டது) ‘’ உடலைக் காப்பதற்காகவே உணவு,குளிரிலிருந்து காப்பதற்கே உடைகள்’’ என்கிறது. ஆனால், ஒருவர் இவைகளைத் தேடுவதிலேயே மூழ்கி விட்டார் என்றால், தான் வந்திருப்பதன் நோக்கத்தையும் , அனைத்து செயல்கள் மற்றும் புனித முயற்சிகளின் குறிக்கோளையும், மறந்து விடுவார். அதற்கு பதிலாக, ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டு இருந்தாலும், அவர் , இயற்கையாக மூச்சு விடுவதைப் போல,’’ நான் இறைவனுக்கு சேவை செய்வதற்காகவும் எனது உண்மை நிலலையைப் புரிந்து கொள்வதற்காகவும் தான் பிறந்திருக்கிறேன்’’ என்பதை எப்போதும் தியானிக்கவும், உணர்ந்திருக்கவும் வேண்டும்.அனைத்து செயல்களும், -அணிவது, உண்பது, நடப்பது,படிப்பது,சேவை ஆற்றுவது,நகருவது போன்றவை -அவை இறைவனது சன்னிதானத்திற்கு ஒருவரை இட்டுச் செல்கிறது என்ற நம்பிக்கையோடு ஆற்றப் பட வேண்டும், ஒவ்வொரு செயலும், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு செய்யப் பட வேண்டும்.