azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
If you are careless about the discipline of truth, every duty laid on you by dharma and every action prompted by dharma will hang heavy as a burden. Hence, you must search for the reality behind all these phenomena in your daily living, and that search will make all your duties, which are dharmic actions, light and pleasant. The Lord has designed people such that they are inclined towards God and are delighted at the expansion of their vision, and are happy when they are moral and virtuous. So, people must serve their own best interests by adhering to their basic nature, by concentrating on the Divine (Brahman), by assiduously cultivating truth, and by rigorously practicing right conduct (dharma).- Dharma Vahini, Ch 13
சத்தியத்தின் கட்டுப்பாட்டில், நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், தர்மத்தால் உங்களுக்குக் கொடுக்கப் படும் ஒவ்வொரு கடமையும், தர்மத்தால் உந்தபடுகின்ற ஒவ்வொரு செயலும் உங்களது கழுத்தில் ஒரு சுமையாகவே தொங்கிக் கொண்டே இருக்கும்.எனவே,உங்களது அன்றாட வாழ்க்கையில், இந்த அனைத்து நிகழ்வுகளின் பின்னால் இருக்கும் சத்தியத்தை நீங்கள் தேட வேண்டும்; அந்தத் தேடல் தார்மீக செயல்களான உங்களது அனைத்து கடமைகளையும் எளிதானதாகவும், இனிமையானதாகவும் ஆக்கி விடும். இறைவன் மனிதர்களை, அவர்கள் இறைவனைச் சார்ந்து இருப்பவர்களாகவும், தங்களது திருஷ்ட்டி விசாலமாகும் போது குதூகலம் அடைபவர்களாகவும், அவர்கள் நல்லொழுக்கமும், நன்னடத்தையும் கொண்டவர்களாக இருக்கும் போது மகிழ்ச்சி அடைபவர்களாகவும், வடிவமைத்துள்ளான். எனவே, மனிதர்கள், தங்களது அடிப்படை இயல்பைப் பற்றி ஒழுகுவதன் மூலமும், பரப்பிரம்மத்தின் மீது மனதைக் குவித்து, விடாமுயற்சியுடன் சத்தியத்தை வளர்த்துக் கொண்டு, தர்மத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதன் மூலமும், அவர்களது சொந்த நலன்களுக்கே உறுதுணையாக இருக்க வேண்டும்.