azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
From the most ancient times Bharatiyas considered Truth as God, loved it, fostered it and protected it and thereby achieved divinity. Bharatiyas were devoted to Truth, wedded to Dharma (Righteousness) and esteemed morality in society as the foremost duty. It is high time you realised what a sacred country Bharat is. In this holy land, nothing is lacking. \"What cannot be found in Bharat cannot be found elsewhere\" is an ancient saying. In spite of these multifarious endowments, this country is being regarded as poor and backward. This is born of delusion. When everything is available within Bharat, why go begging to other countries? Everything has originated from Bharat. Hence, having taken birth in Bharat, strive to promote the glory of Bharat. Every devotee should take a pledge to protect and promote the greatness of Bharat. Like an elephant that does not know its own strength, Bharatiyas are unaware of their power. Despite their myriad capacities, they are behaving as weaklings like an elephant before its mahout. You have to get rid of this weakness. (Divine Discourse 23 Nov 1990)
பண்டைய காலத்திலிருந்தே பாரத மக்கள் சத்தியத்தை கடவுளாகக் கருதி, நேசித்து, பேணிக் காத்து. அதன் மூலம் தெய்வீகத்தைப் பெற்றனர்.பாரத மக்கள் சத்தியத்தைப் பணிந்து, தர்மத்தைப் பற்றி ஒழுகி, சமூகத்தில் நல்லொழுக்கத்தை மதிப்பதை, தங்களது தலையாய கடமையாகக் கருதினார்கள். பாரத தேசம் எவ்வளவு புனிதமான ஒரு நாடு என்பதை இப்போதாவது நீங்கள் உணர்வது மிகவும் அவசியம்.இந்தப் புனித நாட்டில் எதற்கும் குறைவு கிடையாது. ‘’ பாரதத்தில் காண முடியாத எதையும் வேறு எங்கும் காண முடியாது ‘’ என்பது ஒரு பண்டைய பழமொழி.இப்படிப் பட்ட பல தரப்பட்ட மேன்மைகளைப் பெற்றிருந்தாலும், இந்த நாடு ஏழ்மையானதாகவும், பிற்பட்டதாகவும் கருதப் படுகிறது. இது ஒரு மாயையால் தோன்றியதே.எப்போது பாரத நாட்டில் அனைத்தும் இருக்கும் போது,பிற நாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏன்? அனைத்தும் பாரதத்திலிருந்தே தோன்றியவை தான்.எனவே,பாரத நாட்டில் பிறந்த நீங்கள் பாரதத்தின் மகத்துவத்தை மேம்படுத்தப் பாடுபடுங்கள்.ஒவ்வொரு பக்தரும் பாரதத்தின் மகத்துவத்தைப் பேணிக்காத்து, மேம்படுத்துவோம் என ஒரு சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.எவ்வாறு ஒரு யானை தனது பலத்தை அறியாதோ, அவ்வாறே பாரத மக்கள் தங்களது வலிமையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எண்ணற்ற திறன்கள் இருந்த போதிலும், பாரத மக்கள்,தனது பாகனுக்கு முன்னால் வலுவற்றதாக அடிபணியும் யானைப் போல, நடந்து கொள்கிறார்கள். இந்த பலவீனத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.