azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

The path of surrender is like the life of a kitten. Just as the kitten places all its burdens in the mother cat, so too the devotee must place their complete trust on the Lord. The mother cat holds the kitten in its mouth and transports it safely at all times, including very narrow passages. So too, the devotee must place all their burdens on the Lord and surrender fully to His will. Lakshmana is a great exemplar of this path. To serve Rama, Lakshmana renounced all obstac les in his path, like wealth, wife, mother, home, even sleep and food for full fourteen years. He felt that Rama was his all, his happiness and joy, that Rama would grant everything he needed, and his life’s purpose was only to follow Him, serve Him, and surrender his will to Him. If you place all burdens on the Lord and adore Him continuously and consistently, He will certainly provide everything you need. (Prema Vahini, Ch 51)
சரணாகதிப் பாதை ஒரு பூனைக்குட்டியின் (மார்ஜாலக) வாழ்க்கையைப் போன்றது. எவ்வாறு பூனைக்குட்டி தனது அனைத்து சுமைகளையும், தாய்ப்பூனையின் மீது வைக்கிறதோ, அவ்வாறே, ஒரு பக்தனும், தனது முழுமையான நம்பிக்கையை இறைவன் பால் வைக்க வேண்டும். தாய்ப் பூனையானது தனது குட்டியை வாயில் கவ்விக் கொண்டு, எல்லா சமயங்களிலும், குறுகலான பாதைகளிலும் கூட, பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறது. அதைப் போலவே, ஒரு பக்தனும் தனது அனைத்து சுமைகளையும் இறைவன் மீது இறக்கி வைத்து விட்டு, அவனது ஸங்கல்பத்திற்கு முழுமையாக சரணடைந்து விட வேண்டும்.லக்ஷ்மணன் இந்தப் பாதைக்கான மிகச் சிறந்த ஒரு எடுத்துக் காட்டாகும்.ஸ்ரீ ராமருக்குச் சேவை செய்வதற்காக, லக்ஷ்மணன், அவனது பாதையில் வந்த அனைத்து தடைகளையும், அதாவது, செல்வம், மனைவி, தாய், இல்லம், ஏன் உறக்கம் மற்றும் உணவைக் கூட, 14 ஆண்டுகள் முழுவதும் தியாகம் செய்தார். ஸ்ரீ ராமரே தனது அனைத்தும்,தனது சந்தோஷம் மற்றும் ஆனந்தம் எனவும், ஸ்ரீராமர் அவருக்குத் தேவையான அனைத்தையும் அளிப்பார் மேலும் தனது வாழ்க்கையின் குறிக்கோளே அவரைப் பின்பற்றுவது, அவருக்குச் சேவை செய்வது மற்றும் தனது விருப்பத்தை அவருக்குச் சரணாகதி செய்வது தான் என்றும், அவர் கருதினார். உங்கள் சுமைகளை எல்லாம் இறைவன் மீது இறக்கி வைத்து விட்டு, அவரை ஒரு முகமாக, இடையறாது போற்றினீர்களானால், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் கண்டிப்பாக அளித்திடுவார்.