azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
For all actions, the inspirer, the performer and the experiencer is the Sun-God. For people caught up in a meaningless existence and going through an endless round of futile activities, the Sun-God stands out as the exemplar of tireless and selfless service. He enjoys no respite from work. He is above praise and censure. He carries on his duties with absolute equanimity. Everything he does is only for the well-being of the world and not to cause any harm. Draw inspiration from Sun-God. The world cannot survive without the Sun. Life on earth is possible only because of the Sun. The Sun teaches man the lesson of humble devotion to duty, without any conceit. The Sun is the supreme example for everyone that one should do one’s duty with devotion and dedication. Doing one\'s duty is the greatest Yoga, as pointed out by Krishna in the Gita. Let your actions and thoughts be good. You will then experience the Bliss Divine. (Divine Discourse, 15 Jan 1992)
அனைத்து செயல்களிலும் உந்துபவர். உழைப்பவர்,அனுபவிப்பவர் சூரிய பகவானே.அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் முடிவில்லாத வீண் வேலைகள் என்ற சூழலில் சிக்கித் தவிக்கும் மனித குலத்திற்கு, சூரிய பகவான் களைப்பற்ற, தன்னலமற்ற சேவையின் தலை சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். அவர் தமது பணியிலிருந்து ஓய்வே எடுப்பதில்லை.அவர் புகழ்ச்சிக்கும்,இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவராக இருக்கிறார்.அவர் தனது பணிகளை முழுமையான சமச்சீரான மனோபாவத்துடன் ஆற்றுகிறார். அவர் செய்யும் அனைத்தும் உலக நன்மைக்காக மட்டுமே; எவருக்கும் தீமை இழைப்பதற்காக அல்ல. சூரிய பகவானிடமிருந்து உத்வேகம் பெறுங்கள். ஆதவன் இன்றி இந்த அகிலம் இல்லை. சூரியனால் இருப்பதால் மட்டுமே இந்த பூமியில் உயிர்கள் வாழ முடிகிறது.சூரியன் மனிதனுக்கு கடமையின் பால் இருக்க வேண்டிய,அகந்தையற்ற பணிவான பக்தியின் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறான். ஒவ்வொருவரும் தங்களது கடமையை பக்தி, சிரத்தையும் ஆற்ற வேண்டும் என்பதற்கு சூரியன் ஒரு தலை சிறந்த எடுத்துக் காட்டு.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில் சுட்டிக் காட்டியுள்ளது போல், தனது கடமையை ஆற்றுவதே மிக உயர்ந்த யோகமாகும்.உங்களது செயல்களும், எண்ணங்களும் நல்லவையாக இருக்கட்டும்.நீங்கள் பின்னர் தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.